என்னங்க சொல்றீங்க...பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வனிதா வெளியே போய் விட்டாரா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயக்குமார் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏன், எதற்காக அவர் வெளியேறினார், எப்போது வெளியேறினார் என ரசிகர்கள் குழம்பிப் போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேறினர். மூன்றாவது வாரத்தில் டபுள் எவிக்ஷனாக ஷாரிக் மற்றும் அபினய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

அலப்பறை செய்த வனிதா
14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும் நிகழ்ச்சி துவங்கி முதல் நாளில் இருந்தே வனிதா விஜயக்குமார் தான் கெத்து காட்டி வந்தார். காஃபி துவங்கி பல விஷயங்களுக்கும் மற்ற போட்டியாளர்களுடன் பிரச்சனை செய்து, மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் வனிதா. ப்ரோமோ, எபிசோட் அனைத்திலும் வனிதாவின் சண்டை மட்டும் இருந்தது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி வனிதாவை திட்டி தீர்த்து வந்தனர். மற்ற போட்டியாளர்களும் வனிதா மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.

வனிதாவை காப்பாற்றி பிக்பாஸ்
முதல் வாரத்திலேயே வனிதாவிற்கு தான் குறைவான ஓட்டுக்கள் இருந்ததாகவும், அதனால் முதல் ஆளாக அவர் தான் வெளியேறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் டிரெண்டிங் பிளேயர், கேப்டன் என பல காரணங்களைக் கூறி வனிதாவை காப்பாற்றி வந்தார் பிக்பாஸ். கன்டென்ட் கொடுக்கிறார் என்பதற்காக அவர் பண்ணும் அலம்பல்களை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா. இதற்கு வனிதா தான் டைட்டில் வின்னர்னு இப்போதே சொல்லி விட வேண்டியது தானே என்று கூட ரசிகர்கள் டென்ஷனாக கேட்க துவங்கி விட்டனர்.

வனிதாவையே அழுக வச்சுட்டீங்களே
ஆனால் முதல் இரண்டு வாரங்களில் சண்டை போட்ட வனிதா, மூன்றாவது வாரத்திலேயே பிக்பாசிடம் புலம்பி, கண்ணீர் விட்டு அழுகும் நிலை ஏற்பட்டு விட்டது. தாமரை மற்றும் பாலாவுடன் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்டு வந்த மோதல் போக்கு தான் இதற்கு காரணம். நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லை என புலம்பி அழுதார் வனிதா. இதை பார்த்து ரசிகர்களே ஆச்சரியப்பட்டு வருகின்றனர். வனிதாவே அழுகிறாரா என கேட்டு வந்தனர்.

என்னது...வனிதா வெளிய போயிடாரா
இந்நிலையில் லேட்டஸ்ட் அதிர்ச்சி தகவலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதுமே நெட்டிசன்கள், அப்படியானால் இனி யார் கன்டென்ட் கொடுப்பது. யார் சண்டை போடுவதை நாங்கள் பார்ப்பது என கேட்டு வருகின்றனர். அேதே சமயம், தற்போது அவர் வெளியே சென்று சில எபிசோட்களை பார்த்து விட்டு மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அழைத்து வரப்படுவார் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











