வைல்கார்டில் நுழையும் சர்ச்சை பிரபலம்...மீண்டும் பிக்பாசில் இவரா ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சி 45 நாட்களை கடந்து வெற்றிகராமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் 6 பேர் வெளியேறி உள்ளனர்.

திருநங்கையும் மாடலுமான நமிதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாமினேஷன் மூலம் சின்ன பொண்ணு, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சுருதி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளியேறிய அபிஷேக்

வெளியேறிய அபிஷேக்

இவர்களில் அபிஷேக் ராஜா, ஆரம்பம் முதலே கன்டென்ட் கொடுத்து வருகிறார். மக்களின் குறைவான ஓட்டுக்களை பெற்றதால் 21 ம் நாள் அபிஷேக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை இன்ஃப்ளுயனஸ் செய்வதாக பலரால் குற்றம்சாட்டப்பட்டார்.

கன்டென்ட் இல்லையே

கன்டென்ட் இல்லையே

ஆனால் அபிஷேக் ராஜா வெளியேறிய பிறகு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரை மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் அபிஷேக் ராஜா சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது, அவர் வெளியில் வந்த பிறகு அளித்த பேட்டி ஆகியன வைரலாகின.

வைல்கார்டு என்டரி இவரா

வைல்கார்டு என்டரி இவரா

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா மீண்டும் வர போவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. சீசன் 3 ல் கன்டென்ட் கொடுத்து வந்த வனிதா விஜயக்குமார் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு சுவாரஸ்யம் குறைந்ததால் வைல்கார்டு என்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வரப்பட்டார். இதே போல் இந்த சீசனில் அபிஷேக் ராஜா வைல்கார்டு என்ட்ரியாக வர போவதாக கூறப்படுகிறது.

எப்போ வர போகிறார்

எப்போ வர போகிறார்

லேட்டஸ்ட் தகவலின்படி அபிஷேக் ராஜா, ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளாராம். இந்த வார இறுதியில் வைல்கார்டு மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம் அபிஷேக். சர்ச்சைக்குரிய நபராக இருக்கும் அபிஷேக், மீண்டும் என்ன தாக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்த போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லிஸ்டில் உள்ள பெயர்கள்

லிஸ்டில் உள்ள பெயர்கள்

வைல்கார்டு என்ட்ரியாக நமிதா மாரிமுத்து, ஷாலு ஷம்மு, ஷகீலாவின் மகள் மிலா இவர்களில் ஒருவர் என்ட்ரி கொடுக்க போவதாக முதலில் கூறப்பட்டது. அதற்கு பிறகு விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தான் வைல்கார்டு என்ட்ரியில் வர போகிறார் என கூறப்பட்டது. அதோடு பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் பெயரும் வைல்கார்டு என்ட்ரியாக வர போகும் பிரபலங்களின் பெயர்களில் கூறப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X