அட..என்னப்பா சொல்றீங்க...ஏகே 63 அறிவிப்பும் வருதா...எப்போ ?

சென்னை : அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் அப்டேட்களே எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஏகே 62 படம் பற்றிய அப்டேட் வெளியிட்டார்கள். இந்நிலையில் தற்போது ஏகே 63 படத்தின் அறிவிப்பும் வர போகிறதாம்.

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில், சென்னை அண்ணாசாலை போன்று அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது என்று தான் சொன்னார்கள்.

 ஏகே 61 தகவலே காணோமே

ஏகே 61 தகவலே காணோமே

அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் படம் பற்றி வெளியிடப்படவில்லை. வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் கண்டிப்பாக சொல்லி விட்டதால் படத்தின் வேலைகள் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறதாம். ஷுட்டிங் ஸ்பாட்டில் யாரும் கண்டிப்பாக போன் பயன்படுத்தக் கூடாது என வினோத் கண்டிப்பான கன்டிஷன் போட்டுள்ளதால் தான் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கசியாமல் உள்ளதாம்.

 அப்டேட் எப்போ வரும்

அப்டேட் எப்போ வரும்

ஏகே 61 படத்தில் அஜித் ஹீரோ-வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. வயதான காலேஜ் ப்ரொஃபோசர் ரோலில் தான் அஜித் நடிக்கிறார். ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் என்ற விபரங்கள் மட்டும் தான் இது வரை வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஏகே 61 டைட்டில் அறிவிப்பு

ஏகே 61 டைட்டில் அறிவிப்பு


இதற்கிடையில் மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஏகே 62 படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அஜித் பிறந்தநாள் ஏற்பாடுகள்

அஜித் பிறந்தநாள் ஏற்பாடுகள்

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஒருபுறம் ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றால், டிவி சேனல்கள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. டிவி சேனல் ஒன்று அஜித்துடன் நடித்த நடிகைகள் பலரையும் அழைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளது. இதன் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி மே 1 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாம்.

 ஏகே 63 அறிவிப்பும் வருதா

ஏகே 63 அறிவிப்பும் வருதா

தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஏகே 63 படத்தின் அறிவிப்பும் அஜித் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். அஜித்தின் 63 வது படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது கோகுலம் சினிமாஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் சுதா கொங்கரா மற்றும் கேஜிஎஃப் படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் இணையும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X