இனி அஜித்தோட இன்னொரு முகத்தையும் பார்க்கலாம் போலவே...அதிரடியாக வந்த ஏகே 63 அப்டேட்
சென்னை : அஜித் நடிக்க உள்ள ஏகே 63 படம் பற்றிய அடுத்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இதனால் அந்த படம் பற்றிய கமெண்ட்களையும் ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். அஜித்தின் இந்த அதிரடி முடிவுகளைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வலிமை ரிலீசான கையோடு ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஃபிட்டாக மாறிய அஜித்
கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ஏகே 61 படத்தில் அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோல் என கூறப்படுகிறது. இரு ரோல்களுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக இயற்கையான முறையில் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக மாறி உள்ளார் அஜித். அதோடு நீண்ட வெள்ளை தாடி, காதில் கடுக்கன் என வேற மாதிரி லுக்கில் அசத்துகிறார் அஜித்.

இவ்வளவு பெரிய செட்டா
ஏகே 61 படத்திற்காக சென்னை மவுண்ட் ரோடு வங்கி போலவே கிட்டத்தட்ட 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளார்களாம். இதுவரை அஜித் நடித்த எந்த படத்திற்கும் இத்தனை பெரிய செட் அமைக்கப்பட்டது இல்லையாம். படத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த செட்டில் தான் எடுக்கப்பட உள்ளதாம். ஏகே 61 படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 62 அறிவிப்பும் வந்தாச்சு
இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை தாங்கள் தான் தயாரிக்க உள்ளதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டைரக்டர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க எமோஷன்களை உள்ளிட்டக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏகே 63 அறிவிப்பு எப்போ
இந்நிலையில் மற்றொரு தகவலாக, அஜித்தின் 63 படம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அஜித்தை வைத்து வீரம், விவேகம், விஸ்வாசம் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் சிறுத்தை சிவா தான் நான்காவதாக அஜித்தை வைத்து ஏகே 63 படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்காக அஜித் செய்த விஷயம்
ஒரு படத்தை முடிக்காமல் அடுத்த படத்தில் ஒப்பந்தமாவதில்லை என்பதை பல வருடமாக கொள்கையாக கடைப்பிடித்து வந்தார் அஜித். ஆனால் வலிமை படத்திற்காக ரசிகர்கள் 3 ஆண்டுகளாக காத்திருந்ததால் இனியும் அவர்களை காக்க வைக்க கூடாது என தனது பல வருட கொள்கையை தளர்த்திக் கொண்டு, ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். ஒரே சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் அஜித் கமிட்டாகி வரும் ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், வரிசையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க தயாராகி வருவது மற்றொரு ஆச்சரியத்தை தந்துள்ளது.
Recommended Video

ஏகே 63 விற்கு இப்படி ஒரு அப்டேட்டா
ஏகே 61 படத்தில் மட்டுமல்ல, ஏகே 63 படத்திலும் அஜித் இரட்டை வேடத்தில் தான் நடிக்க போகிறாராம். ஏகே 61 படத்தில் இரு வேடங்களுக்கும் இடையே வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைத்துள்ள அஜித், ஏகே 63 படத்திலும் இரு ரோல்களுக்கு இடையே வித்தியாசம் காட்ட வேற கெட்டப்பிற்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி அடுத்தடுத்த படங்களில் அஜித்தின் வெவ்வேறு முகங்களை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











