நீலாம்பரி ரிட்டர்ன்ஸ்... நெல்சன் இயக்க போறது தலைவர் 169 ஆ? படையப்பா 2 ஆ?

சென்னை : தளபதி 169 பற்றி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இவை ஒவ்வொன்றும் பல கேள்விகளை எழுப்பி வருவதால் படக்குழு முதல் ரசிகர்கள் வரை செம டென்ஷனாகி உள்ளனர்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி பல நாட்களாகவே உலாவி வந்தது. தேசிங்கு பெரியசாமி, மிஸ்கின், வெற்றிமாறன், சிறுத்தை சிவா என பல டாப் டைரக்டர்களின் பெயர்கள் இதற்காக சொல்லப்பட்டும் வந்தது.

தலைவர் 169 அறிவிப்பு

தலைவர் 169 அறிவிப்பு

இந்நிலையில் தலைவர் 169 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதன்படி டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்க போவதாகவும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பிரியங்கா அருள்மோகன் ரஜினியின் மகளாக நடிக்க போவதாகவும், சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய ரோல் பண்ண போவதாகவும் கூறினார்கள்.

பிரச்சனையை முடித்த ரஜினி

பிரச்சனையை முடித்த ரஜினி

இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு கடுப்பான ரஜினி, தலைவர் 169 டைரக்டரை மாற்றி விட்டதாகவும், நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்கவில்லை என்றும் கூறப்பட்டு. தலைவர் 169 படம் கைவிடப்பட்டதாகவும் பல தகவல்கள் பரவின. இதற்கு முடிவு கட்டும் விதமாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், தலைவர் 169 ஸ்டில்லை கவர் போட்டோவாக மாற்றினார். நெல்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் #Thalaivar169 ஹேஷ்டேக்கை பதிவிட்டிருந்தார். இதனால் தலைவர் 169 வர போவது உறுதியாகி விட்டது.

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

லேட்டஸ்ட் தகவலாக வாரத்திற்கு இரண்டு முறை நெல்சன், ரஜினியை சந்தித்து கதை பற்றி ஆலோசித்து வருகிறாராம். கதை விரிவாக்கம் தொடர்பாகவே இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். ஜுன் கடைசி அல்லது ஜுலை முதல் வாரத்தில் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங்கை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடி இவரா

ரஜினிக்கு ஜோடி இவரா

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பிறகு சரண்யா பொன்வண்ணன் நடிக்க போவதாக கூறினார்கள். தற்போது ஐஸ்வர்யாவும் இல்லை, சரண்யாவும் இல்லை. ரம்யா கிருஷ்ணன் தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார்.

படையப்பா 2 எடுக்க போறாங்களா

படையப்பா 2 எடுக்க போறாங்களா

தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்படுகிறதே தவிர ரஜினிக்கு ஜோடியா அல்லது வில்லியா என உறுதியாக தெரியவில்லை. இதனால் நெட்டிசன்கள், நெல்சன், ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க போகிறாரா அல்லது படையப்பா 2 இயக்க போகிறாரா என சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், தலைவர் 169 படத்தை வைத்து இன்னும் எத்தனை சந்தேகத்தை தான் கிளப்புவீர்கள். என்ன அப்டேட் கொடுத்தாலும் பிரச்சனையை கிளப்பிக்கிட்டே இருக்கீங்களே என கடுப்பாகி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X