அட செம தகவலா இருக்கே...விஜய் சேதுபதியின் 96 படத்தின் பார்ட் 2 வருது...யாரு ஹீரோ ?
சென்னை : விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த அழகிய காதலை சொன்ன படம் 96. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறதாம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பகவதி பெருமாள், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2018 ம் ஆண்டு ரிலீசான படம் 96. காதலை சொல்ல பயந்த 1996 ம் ஆண்டு பள்ளி பருவ நண்பர்கள் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். மீண்டும் சந்திக்கும் காதலர்களின் உணர்வுகள், அவர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை சொன்ன கதை.

பிளாஷ்பேக் ஓட வைத்த 96
சொல்லாமல் மறைத்த காதல், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் முதல் காதலன்/ காதலியை சந்திக்க கிடைக்கும் வாய்ப்பு என கிட்டதட்ட அனைவரின் மனதிலும் பள்ளி பருவ காதல் நினைவுகளை அசை போட வைத்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோரை ராம் - ஜானுவாகவே பார்க்க வைத்த படம்.

பிற மொழிகளிலும் ஹிட்
சி.பிரேம்குமார் எழுதி இயக்கிய இந்த படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் 2019 ம் ஆண்டு ரீமேட் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் 2020 ம் ஆண்டு ஜானு என்ற பெயரில் பிரேம்குமாரே ரீமேக் செய்தார். அனைத்து மொழிகளிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது.

பார்ட் 2 வராதா
பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் ராம்-ஜானு இருவரும் தங்களின் வாழ்க்கை பற்றி நிறைய பேசி, கடைசியாக பிரிந்து செல்கிறார்கள். அதற்கு பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்தார்களா, என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக செம தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

96 பார்ட் 2 ஹீரோ யாரு
லேட்டஸ்ட் தகவலின்படி 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட உள்ளதாம். இதற்கான திரைக்கதையை பிரேம் தயார் செய்து முடித்து விட்டாராம். இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளும் ஏற்கனவே துவங்கி விட்டதாம். இதனால் அடுத்த கேள்வியாக இதில் ஹீரோவாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் சேதுபதி - த்ரிஷாவையே நடிக்க வைக்கலாம் என யோசித்து, அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











