சூர்யாவின் புதிய பிசினஸ்...இது புதுசா இருக்கே...இதை கமல் கூட யோசிச்சிருக்க மாட்டார்

சென்னை : பான் இந்தியா அளவில் டாப் நடிகராகி விட்டார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் 2020 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை வென்றது.

தற்போது வணங்கான், வாடிவாசல், டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கும் படம் என வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோலக்ஸ் ரோல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் ராக்கெட் படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யாவிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

2டி என்டர்டைன்மென்ட்

2டி என்டர்டைன்மென்ட்

ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் சூர்யா, 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என 2டி நிறுவனம் தயாரித்த படங்கள் விருதுகளை அள்ளி வருகின்றன. இது தவிர பல படங்களை தயாரித்து வருகிறது.இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கையும் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது.

சூர்யாவின் புதிய பிசினஸ்

சூர்யாவின் புதிய பிசினஸ்

சூர்யா, அகரம் அறக்கட்டளையை துவக்கி பல ஆண்டுகளாக பல மாணவர்களின் கல்விக்காக உதவி வருகிறார். இந்த சமயத்தில் தனது பிசினசில் அடுத்த படிக்கு செல்ல சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து, நடத்த சூர்யா முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

செம பிளானா இருக்கு

செம பிளானா இருக்கு

மாவட்டம்தோறும் சில தியேட்டர்களை குத்தகை எடுத்து நடத்த சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும், ரசிகர்களின் விருப்பங்களை தெரிந்து கொள்வதற்காக தான் சூர்யா இந்த ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு விநியோகஸ்தர்களின் சிரமங்களை அறிந்து கொள்வதற்காகவும் அவர் இதை செய்வதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே முடிவு செய்தது தானா

ஏற்கனவே முடிவு செய்தது தானா

ரசிகர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படவும், விநியோகஸ்தர்களின் சிரமங்களை தெரிந்து கொள்ளவும் தான் முயற்சி மேற்கொள்ள உள்ளதாக சமீபத்தில் சூர்யா தெரிவித்திருந்தார். தான் சொன்னதை நிறைவேற்றுவதற்காக தான் சூர்யா இந்த வகையில் பிசினசை டெவலப் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கமலையே மிஞ்சி விடுவார்

கமலையே மிஞ்சி விடுவார்

இந்த விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள் செம குஷியாகி சூர்யாவை பாராட்டி வருகின்றனர். வழக்கமாக கமல் தான் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவார். ஆனால் தற்போது சூர்யா, கமலையே மிஞ்சி விடுவார் போலவே என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X