For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமலின் அடுத்த படத்தில் மம்முட்டியா ?...தளபதி 2 கமல் வெர்சனா இருக்குமோ?

  |

  சென்னை : கடந்த 4 வருடங்களாக எந்த அளவிற்கு கமல் படம் பற்றியே பேச்சே இல்லாமல் இருந்ததோ, தற்போது அதற்கும் சேர்த்து உலகத்தில் உள்ள அத்தனை ரசிகர்களையும் தனது படம் பற்றியே பேச வைத்து விட்டார் கமல்.

  Recommended Video

  Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil

  ஜுன் 3 ம் தேதிக்கு முன்பு வரை சினிமா பற்றி பேசுபவர்கள் கேஜிஎஃப் 2 படத்தை உதாரணமாக காட்டி பேசினர். திரும்பிய பக்கமெல்லாம் கேஜிஎஃப் பற்றிய பேச்சு, பாராட்டாக இருந்தது. ஆனால் ஜுன் 3 ம் தேதி விக்ரம் ரிலீசுக்கு பிறகு கதை அப்படியே மாறி விட்டது.

  இப்போது யார் பேசினாலும் விக்ரம் படத்தை உதாரணமாக காட்டி பேசுகிறார்கள். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பிற மொழி சினிமாவை சேர்ந்தவர்களும் விக்ரம் படத்தை பிரம்மிப்பாக பேசி வருகின்றனர். விக்ரம் மாதிரி கதை வேண்டும் என மற்ற நடிகர்களும் கேட்க துவங்கி விட்டதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.

  4 பாகங்களாக உருவாகும் டிமான்டி காலனி.. ஆகஸ்டில் சூட்டிங் -அப்டேட் சொன்ன அருள்நிதி! 4 பாகங்களாக உருவாகும் டிமான்டி காலனி.. ஆகஸ்டில் சூட்டிங் -அப்டேட் சொன்ன அருள்நிதி!

  கமலின் அடுத்த படம்

  கமலின் அடுத்த படம்

  விக்ரம் படத்தையே ரசிகர்கள் முழுவதுமாக கொண்டாடி முடிக்கவில்லை. ஆனால் அதற்குள் கமலின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளிவர துவங்கி விட்டன. விக்ரம் படத்தை தொடர்ந்து மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக கமல் ஏற்கனவே கூறி விட்டார். இது தேவர்மகன் 2 படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  கமலின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார்

  கமலின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார்

  விக்ரம் 3, தேவர்மகன் 2, இந்தியன் 2 உள்ளிட்ட 10 படங்களில் நடிக்க கமல் கமிட்டாகி உள்ளார். இதில் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் சொல்லப்படும் நிலையில், இல்லை வேறு ஒரு படத்தில் நடித்து விட்டு தான் கமல், மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க போகிறார். மகேஷ் நாராயணன் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

  கமல் படத்தில் மம்முட்டியா

  கமல் படத்தில் மம்முட்டியா

  இந்நிலையில் கமல், மகேஷ் நாராயணன் இணைய போகும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் படி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, நரேன் என பல நடித்ததை போல், இந்த படமும் மல்டி ஸ்டார் படம் தானாம். இந்த படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியிடம் பேசப்பட்டு வருகிறதாம். படத்தின் கதை மம்முட்டிக்கு பிடித்து இருந்தாலும், படத்தில் கமல் படத்தில் நடிப்பது பற்றி அவர் எந்த முடிவையும் சொல்லவில்லையாம்.

  ஓகே சொல்வாரா மம்முக்கா

  ஓகே சொல்வாரா மம்முக்கா

  நடிகர் மம்முட்டி தமிழில் முதல் முறையாக நடித்த படம் மெளனம் சம்மதம். அதற்கு பிறகு பல பிரபலமான படங்களில் நடித்த மம்முட்டி, கடைசியாக 2019 ம் ஆண்டு பேரன்பு என்ற படத்தில் நடித்தார். கடந்த 3 ஆண்டுகளாக மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலேயே மம்முட்டி அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் மெகா ஸ்டார்களுடன் இணைந்து மம்முட்டி நடித்த படம் என்றால் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்கள் தான். தற்போது மீண்டும் தமிழில் மெகா ஸ்டார் ஒருவருடன் மம்முட்டி இணைந்து நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  ஏதுக்கும் லால் ஏட்டனை கேளுங்களேன்

  ஏதுக்கும் லால் ஏட்டனை கேளுங்களேன்

  அதே சமயம் இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள், மகேஷ் நாராயணன் - கமல் இணையும் படம் தேவர்மகன் 2 என்று தானே சொன்னார்கள். ஆனால் மம்முட்டி உடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒருவேளை தளபதி 2 எடுக்க போறாங்களோ. அதுவும் கமல் வெர்சனில்.கமல் மட்டும் தனியா நடிச்சதுக்கே கலெக்ஷன் 400 கோடியை தாண்டி நான்ஸ்டாபாக போய் கொண்டிருக்கிறது. இதில் கமல் - மம்முட்டி இணைந்து நடித்தால் ஒரே நாளில் 400 கோடியை தட்டிகிட்டு போய்டுவாங்களே. எதுக்கும் லால் ஏட்டன், ரஜினி போன்றவர்களை கேட்டு பாருங்க. அப்பத்தான் ஓப்பனிங் டே கலெக்ஷன் 1000 கோடியை தாண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  According to sources, Kamal - Mahesh Narayanan movie also multi starrer story. Team approached malayalam actor Mammooty for a vital role in this movie. Fans asked that it will a Thalapathy 2 Kamal version or Devarmagan 2. But it definetly it will become a another block buster movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X