அட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவிற்கு பதில் இவரா ?

மும்பை : பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கானை வைத்து, கோலிவுட்டின் மாஸ் ஹிட் டைரக்டர்களில் ஒருவரான அட்லீ புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் புனே மற்றும் மும்பையில் நடைபெற்றது.

ஆரம்பமே புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆக்ஷன் காட்சி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதற்குள் மூன்று வார கேப்பில் ஸ்பெயின் சென்று, பதான் படத்தின் பாடல் காட்சிகளில் நடித்து விட்டு வர திட்டமிட்டார் ஷாருக்கான்.

ஷுட்டிங்கை ரத்து செய்த ஷாருக்கான்

ஷுட்டிங்கை ரத்து செய்த ஷாருக்கான்

ஆனால் அதற்குள் அவரது மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 நாட்களுக்கும் மேலாக மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனால் மனமுடைந்த ஷாருக்கான் அனைத்து படப்பிடிப்புக்களையும் ரத்து செய்து விட்டு, வீட்டிலேயே இருந்து வருகிறார்.

அட்லீ படத்தில் திடீர் மாற்றம்

அட்லீ படத்தில் திடீர் மாற்றம்

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் அட்லீ இயக்கும் படத்தில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாராவும், மற்றொரு கேரக்டருக்கு ஜோடியாக பிரியா மணியும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, ஒரு மாதங்களாக நயன்தாராவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

நயன்தாராவிற்கு பதில் இவரா

நயன்தாராவிற்கு பதில் இவரா

லேட்டஸ்ட் தகவலாக நயன்தாராவிற்கு பதில் அவர் நடித்த ரோலில் சமந்தா நடிக்க போகிறாராம். இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, படத்தின் வேலைகள் தொடர்ந்து தாமதமாகி வருவது தானாம். ஷாருக்கான் ஷுட்டிங் அனைத்தையும் ரத்து செய்து விட்டதால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் விளம்பரங்களின் ஷுட்டிங் பாதியில் நிற்கிறதாம்.

புலம்பிய நயன்தாரா

புலம்பிய நயன்தாரா

மகன் சிறையில் இருப்பதால் ஷாருக்கான் ஷுட்டிங்கிற்கு வர முடியாத நிலையில் உள்ளார். ஆனால் அட்லீ - ஷாருக்கான் படத்திற்காக நயன்தாரா ஒதுக்கி வந்த அக்டோபர் மாத கால்ஷீட்கள் இதனால் வீணாகி விட்டனவாம். தொடர்ந்து படத்தின் ஷுட்டிங் தாமதமாகி வருவதால், தனது கால்ஷீட்டை வீணடிக்காமல் தனது மற்ற படங்களுக்கு வழங்க முடிவு செய்து விட்டாராம் நயன்தாரா.

இவராவது ஓகே சொல்வாரா

இவராவது ஓகே சொல்வாரா

எப்போது மீண்டும் ஷுட்டிங்கை துவங்குவார்கள் என உறுதியாக தெரியாததால் இந்த படத்தில் இருந்து விலக நயன்தாரா முடிவு செய்து விட்டாராம். இதனால் டைரக்டர் அட்லீ, இந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிடம் பேசி வருகிறாராம். சமந்தா ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க சமீபத்தில் தான் ஒப்பந்தமானார். அதனால் இந்த படத்தின் வாய்ப்பை ஏற்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X