என்னது...விடுதலை பார்ட் 2 வருதா...இது தான் தாமதத்திற்கு காரணமா?

சென்னை : டைரக்டர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆச்சரியமாக, இப்படி ஒரு அப்டேட்டை எதிர்பார்க்கவில்லையே என கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தக் கூடிய டைரக்டர்களில் ஒருவர் வெற்றிமாறன். நாவல்களை படமாக இயக்கி வெற்றி காண்பதில் கைதேர்ந்தவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி லீட் ரோலில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஜெயகாந்தனின் துணைவன் என்ற நாவலின் கதையை தழுவி படமாக இயக்கி வருகிறார்.

வாடிவாசலை துவக்கிய வெற்றிமாறன்

வாடிவாசலை துவக்கிய வெற்றிமாறன்

இந்த படத்தில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி நக்சலைட்டாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க போவதாக கூறப்பட்டது. சமீபத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் நடத்தப்பட்டது. விடுதலை படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

விடுதலைக்காக காத்திருந்த ரசிகர்கள்

விடுதலைக்காக காத்திருந்த ரசிகர்கள்

இதனால் விடுதலை படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை படத்தின் வேலைகள் இன்னும் மீதம் இருப்பதாக கூறி, வாடிவாசல் படத்தின் வேலைகளை துவங்குவதை தள்ளி வைத்தார் வெற்றிமாறன். விடுதலை படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாக, அந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள் சமீபத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றன.

செட்டிலேயே பட்டையை கிளப்புறாரே

செட்டிலேயே பட்டையை கிளப்புறாரே

கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வரும் விடுதலை படத்திற்காக காடு போலவே செட் அமைக்கப்பட்டு, அதில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஒரு கிராமத்தை போல் செட் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமலை பகுதி மக்களை வெற்றிமாறன் இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார்.

என்னது..விடுதலை பார்ட் 2 வருதா

என்னது..விடுதலை பார்ட் 2 வருதா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் இயக்கி வருகிறாராம். முதலில் ஒரே படமாக இயக்க திட்டமிட்ட அவர், பிறகு இரண்டு பாகங்களாக இயக்க பிளானை மாற்றி விட்டாராம். இதனால் தான் வாடிவாசல் படத்தின் வேலைகளை தள்ளி வைத்து விட்டு, முழுமூச்சாக விடுதலை படத்தின் வேலைகளை கவனித்து வருகிறாராம். விடுதலை படமே எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்திருந்தது. இதில் விடுதலை 2 படமும் உருவாகி வருதாக வெளியாகி உள்ள தகவல் தமிழ் சினிமாவையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X