»   »  "கோஸ்ட்" கோபல் வர்மா முதல் "மஸ்த்" மாயா வரை… அழகிய பேய்கள்...!

"கோஸ்ட்" கோபல் வர்மா முதல் "மஸ்த்" மாயா வரை… அழகிய பேய்கள்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகு தேவதைகள் எல்லாம் பேய் வேஷம் போட்டால் ஒரு அதிரடியாகத்தான் இருக்கும். அனுஷ்கா, ஆன்ட்ரியா, ஹன்சிகா என அழகு தேவதைகள் மட்டுமல்ல சரத்குமார், லாரன்ஸ் ராகவேந்திரா என ஹீரோக்களும், மொட்டை ராஜேந்திரன் போன்ற காமெடியன்களும் கூட இப்போது சினிமாவில் டெரர் காட்டுகின்றனர்.

அழகு தேவதைகளை பேய் மேக் அப்பில் பார்க்க கொஞ்சம் டெராக இருந்தாலும் வேறு வழியின்றி ரசிகர்கள் அழகிய பேயை பார்த்து ரசிக்கத்தான் செய்கின்றனர்.

இங்கே சில அழகிய பேய்களை பார்த்து ரசிக்கலாம் வாங்க...

அனுஷ்காவின் அவதாரம்

அனுஷ்காவின் அவதாரம்

தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. தெலுங்கில் நடித்து தமிழில் டப் செய்யப்பட்ட அருந்ததி படம்தான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதில் அனுஷ்காவின் அபாரமான நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

ஜோதிகா

ஜோதிகா

குறும்பு பார்வையும் துறு துறு நடிப்புமாக இருந்த ஜோதிகாவின் நடிப்பில் சிறந்த மைல்கல்லாக அமைந்த படம்தான் சந்திரமுகி.

லட்சுமிராய்

லட்சுமிராய்

காஞ்சனா என்ற பேய் படத்தில் நடித்திருந்தாலும் ஒரிஜினல் பேயாக சவுகார் பேட்டை படத்தில் டெரர் காட்டியுள்ளார்

நயன்தாரா

நயன்தாரா

அழகிய தீயாய்... கவர்ச்சிப் புயலாய் நடித்து ரசிகர்களை மிரட்டிய நயன்தாரா இப்போது மாயா படத்தில் பேயாய் மிரட்ட வருகிறார்.

ஹன்கிகா

ஹன்கிகா

துறு துறு குழந்தையாய்... கவர்ச்சிக் கன்னியாய் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்த ஹன்சிகா அரண்மனை படத்தில் பேய் வேஷம் போட்டு கொலைவெறி ஆட்டம் போட விட்டிருப்பார்கள். ஆனாலும் அசத்தியிருப்பார் ஹன்சிகா.

சரத்குமார்

சரத்குமார்

கம்பீரமாய் நடித்து அசத்தும் சரத்குமாருக்கு புடவை கட்டி காஞ்சனாவில் அரவாணியாக நடிக்க வைத்திருப்பார்கள். இடையில் பேயாகவும் வந்து டெரர் காட்டியிருப்பார் சரத்குமார்.

லாரன்ஸ்

லாரன்ஸ்

டான்ஸ் மாஸ்டராக இருந்து இயக்குநர் ஆன ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 படத்தில் பேயாட்டம் ஆடி அசத்தியிருப்பார்.

மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன்

வில்லனாக நடித்து... காமெடியனா நடித்து அசத்திய மொட்டை ராஜேந்திரன் டார்லிங் படத்தில் கோஸ்ட் கோபால் வர்மாவாக அசத்திய படம்தான் டார்லிங்... இதில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது.

பேய் படங்களுக்கு வரவேற்பு

பேய் படங்களுக்கு வரவேற்பு

தமிழ் சினிமாவில் சாமி படங்களுக்கு எத்தனை வரவேற்பு இருக்கிறதோ அதே போல போய் படங்களுக்கும் பெருவாரியான வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் தற்போது ஏராளமான பேய், ஆவி படங்கள் வரிசைகட்டி எடுக்கப்படுகின்றன. இன்னும் எத்தனை அழகு தேவதைகளை பேயாட்டம் ஆட வைக்கப்போகிறார்களோ தெரியலையே.

English summary
South Indian actor or actress looking this scary. Check out their spooky horror looks in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil