twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத் தேர்தலும் பேங்க் லாக்கரில் இருக்கும் ஓட்டுப்பெட்டிகளும்

    நடிகர் சங்கத் தேர்தலில் வெல்லப்போவது நாயகனா அல்லது வில்லனா

    |

    சென்னை: நடிகர் சங்கத்தேர்தல் வழக்கு வர்ற ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வருது. வழக்கு விசாரணை முடிஞ்சு எப்பிடி தீர்ப்பு சொல்லப் போறாங்களோன்னு ஓட்டு போட்டவங்க எல்லாரும் ஆவலா காத்திட்டு இருக்காங்க. ஓட்டு போட்ட பெட்டிகள் எல்லாம் ஒரு பேங்க் லாக்கர்ல வச்சிருக்காங்க ஓட்டு பெட்டிய பத்திரமா பாதுகாக்குறதுக்காக அந்த பேங்க்குக்கு மாசா மாசம் ஏகப்பட்ட பணம் வேற செலவாகுதாம்.

    நாட்டோட லோக்சபா தேர்தல் கூட நல்லவிதமாக நடந்து முடிஞ்சிருச்சு. ஆனா நடிகர் சங்கத் தேர்தல் ஏகப்பட்ட குளறுபடிக்கு நடுவுல நடந்தும் பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. நடிகர் சங்கம் கட்டியிருக்கிற கட்டடம் குறித்தும், ஏகப்பட்ட பிரச்சினைகள் ரொம்ப நாளாக இருந்துட்டு இருக்கு.

     South Indian Actor’s Association case hearing on August 3

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு போன மாசம் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதுலே ஏற்கனவே சங்கத்தோடு பொறுப்புல இருக்குற நாசர் விஷால், சூர்யா, கார்த்தி எல்லாரும் வந்து பாண்டவர் அணி அப்படின்னு சொல்லி ஒரு அணியில் நின்னாங்க.

    ஏற்கனவே இருக்குறவங்க நிர்வாகம் பண்றது சரியில்லேன்னு சொல்லிட்டு, நடிகர் சங்கத்த பாதுகாக்க வந்துருக்கேன்னு சொல்லிட்டு, பாண்டவர் அணிக்கு எதிரா டைரக்டர் பாக்கியராஜ் ஐசரி கணேஷ் இவங்கல்லாம் சேந்துகிட்டு "சுவாமி சங்கரதாஸ்" அணி அப்படின்னு மோதினாங்க.

    நடிகர் சங்கத்துக்கு திடீர்னு தேர்தல் தேதிய அறிவிச்சதால பல பேர்னால ஓட்டு போட முடியாம போச்சு. இன்னும் சொல்லப்போனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே வெளியூரில் மாட்டிட்டு தபால் ஓட்டு போடுறதுக்கு ட்ரை பண்ணினார் ஆனால் அவர் ஓட்டு போட முடியல. 1604 பேர் மட்டுமே ஓட்டு போட்டிருக்காங்க.

    நிலவரம் இப்படி இருக்கிறப்ப, இந்த நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் ஒண்ணா சேந்து சென்னை ஹைகோர்ட்டுல வழக்கு போட்டாங்க இதனால ஒட்டு எண்ணிக்கை நின்னு போச்சு. இந்த ஓட்டு போட்ட பெட்டிகள் எல்லாம் ஒரு பேங்க் லாக்கர்ல வச்சிருக்காங்க

    நடிகர் சங்கத்தோடு கட்டிடமோ பணப்பிரச்சினையினால நிலுவையில் இருக்கு. இதுல இன்னொரு பிரச்சனை வேற. ஓட்டு பெட்டிய பத்திரமா பாதுகாக்குறதுக்காக அந்த பேங்க்குக்கு மாசா மாசம் ஏகப்பட்ட பணம் வேற செலவாகுதாம்.

    இந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு வரும் ஆகஸ்ட் 2ல் விசாரணைக்கு வரும்போது நீதிபதி என்ன தீர்ப்பு சொல்ல போறான்னு ஓட்டு போட்டவங்க எல்லாம் ஆவலா காத்துக்கிட்டு இருக்காங்க. ஜெயிக்கப்போறது ஹீரோவா வில்லனா இன்னும் சில நாட்கள்ல தெரிஞ்சுரும்.

    English summary
    The case against the actor's association is pending on August 2. Everyone is eagerly waiting for judgment on the case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X