twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.பாக்யராஜுக்கு Show Cause நோட்டீஸ் அனுப்பிய நடிகர் சங்கம்: உங்களை ஏன் நீக்கக் கூடாது எனவும் கேள்வி

    |

    சென்னை: நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், நடிகர் சங்கத் தேர்தலில் சங்கரதாஸ் சுவாமி அணி சார்பில் போட்டியிட்டார்.

    Recommended Video

    Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

    ஆனால், பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட நாசர், நடிகர் சங்கத் தலைவராக வெற்றிப் பெற்றார்.

    இந்நிலையில், மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    வாலியை எப்போதும் வெறுப்பேற்றியுள்ள பாக்யராஜ்... ஆனால் அவருடன் தொடர்ந்து வேலை செய்த காரணம் தெரியுமா?வாலியை எப்போதும் வெறுப்பேற்றியுள்ள பாக்யராஜ்... ஆனால் அவருடன் தொடர்ந்து வேலை செய்த காரணம் தெரியுமா?

    நடிகர் சங்கத் தேர்தல்

    நடிகர் சங்கத் தேர்தல்

    கடந்த 2019 ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த மார்ச் மாதம் நடிகர் சங்க வாக்குகள் எண்ணப்பட்டன.

    பாண்டவர் அணி வெற்றி

    பாண்டவர் அணி வெற்றி

    வாக்கு எண்ணிக்கையின் முடிவில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றிப் பெற்றனர். இதனையடுத்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட மேலும் சிலர் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலை நடத்தக்கூடாது என சில உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல், ஐசரி கணேசனின் தூண்டுதலின் பேரில் தான் சங்கரதாஸ் அணியினர் தேர்தலில் போட்டியிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்தில் சார்பில் கே.பாக்யராஜ்க்கு தற்போது Show Cause நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    உங்களை ஏன் நீக்கக் கூடாது?

    உங்களை ஏன் நீக்கக் கூடாது?

    இந்த நோட்டீஸில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகள் பகிரப்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக, நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது அவதூறுகள் பரப்பி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டவிதிகளுக்கு எதிராக இதை செய்திருப்பதாகவும், சங்க உறுப்பினர்கள் சிலர் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், செயற்குழுவில் முடிவெடுத்து, சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்திலிருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15 நாட்களில் விளக்கம் வேண்டும்

    15 நாட்களில் விளக்கம் வேண்டும்

    அதுமட்டும் இல்லாமல், இந்த கடிதம் குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பாக்யராஜுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்கத்தின் முன்னால் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் கடிதம் மூலமோ அல்லது செயற்குழுவிற்கு சென்றோ விளக்கம் அளிக்கலாம் என்றும், அப்படி அது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் இருவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்து என்ன நடக்கும்?

    அடுத்து என்ன நடக்கும்?

    தென்னிந்திய நடிகர்கள் சங்க விதி 13-ன்படி, சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லல்கூடாது என விதி உள்ளது.. தற்போது அனுப்பப்பட்ட கடிதம் பொதுச்செயலாளர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தலைவர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டால் அந்த உறுப்பினர் நீக்கப்பட்டதாக கருதப்படும். எனவே பொதுச்செயலாளர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ளதால், பாக்யராஜ், உதயா இருவரின் விளக்கமும் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிமுகவில் இணைந்த பாக்யராஜ்?

    அதிமுகவில் இணைந்த பாக்யராஜ்?

    நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், "நான் முறையாக அதிமுகவில் இணைந்து செயல்படப் போவதாக" கே. பாக்யராஜ் நேற்று தெரிவித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்தித்த அவர், "எம்ஜிஆர் இருந்தபோது அதிமுக கட்சி எப்படி இருந்ததோ, அப்படி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் ஆசை. எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து அதிமுகவை பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பேன். எம்ஜிஆரின் பெயரை காப்பாற்றவும், அதிமுகவை ஒருங்கிணைக்கவும் என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    South Indian Actors Association send a Show Cause Notice to Actor K. Bhagyaraj. They have also sent a letter to explain within 15 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X