»   »  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தென் இந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம், ரயில்மறியல், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

South indian film actors association decides to do protest for cauvery

இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல இளைஞர்கள் ஒன்று கூடி தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதே போன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
South indian film actors association decides to do protest for cauvery, the dates for the protest will be announced later, Ponvannan says actors association will do protest agaisnt of Tuticorin sterlite industry too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X