twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப அவமானமா இருந்தது.. சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டனர்.. கலங்கிய சிரஞ்சீவி!

    |

    ஹைதராபாத்: இந்தி படங்கள் மட்டும் தான் இந்திய படங்கள் என்கிற பிம்பத்தை பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருந்தனர் என சமீபத்தில் ஆச்சார்ய பட விழாவில் கண்கலங்கி நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

    தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், என்.டி. ராமராவ், ராஜ்குமார், நாகேஷ்வர ராவ், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என அவர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    டெல்லிக்கு தேசிய விருது பெற சென்றிருந்த போது தனக்கு நேர்ந்த அவமான நினைவுகளை பகிர்ந்திருந்தார் சிரஞ்சீவி.

    கண்கலங்கிய சிரஞ்சீவி

    கண்கலங்கிய சிரஞ்சீவி

    டோலிவுட் திரையுலகின் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் உடன் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசிய வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி தான் தேசிய மொழி என பேசி கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் நடத்திய வாதத்தை தொடர்ந்து இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

    சிரஞ்சீவியின் டெல்லி அனுபவம்

    சிரஞ்சீவியின் டெல்லி அனுபவம்

    1988-ஆம் ஆண்டு 'ருத்ரவீணை' திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு நர்கிஸ் தத் விருது கிடைததது என்றும். அந்த விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றபோது அந்த நிகழ்ச்சி மேடையை சுற்றியுள்ள சுவர்கள் முழுவதிலும் இந்திய சினிமாவின் பெருமை மிகு படைப்புகள் என சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால், அதில், தென்னிந்திய படங்கள் ஒன்றுமே இல்லை.

    இவை தான் இந்திய படங்களா

    இவை தான் இந்திய படங்களா

    பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா மற்றும் பலரின் புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படங்களை காட்டி அவர்கள் பெருமையாக பேசிக் கொண்டனர். ஆனால், தென்னிந்திய படங்கள் என்கிற பெயரில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடனம் ஆடும் ஒரு புகைப்படத்தையும், அதிக படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு பிரேம் நசீரினி ஒரு படத்தையும் மட்டுமே காண்பித்தார்கள்.

    சிவாஜி, என்.டி.ஆர் எங்கே

    சிவாஜி, என்.டி.ஆர் எங்கே

    தென்னிந்திய சினிமா உலகின் டெமி காடாக கருதப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், ராஜ்குமார், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லாமல் அவர்களை இருட்டடிப்பு செய்து விட்டனர். அதை பார்த்த எனக்கு ரொம்பவே அவமானமாக இருந்தது. இந்திய படங்கள் என்றாலே அது இந்தி படங்கள் தான் என்கிற பிம்பத்தை அவர்கள் உருவாக்கி இருந்தனர்.

    Recommended Video

    Sudeep VS Ajay Devgan Controversy | Sudeep-க்கு குவியும் தலைவர்களின் ஆதரவு | Oneindia Tamil
    இப்போ பெருமைப்படுகிறேன்

    இப்போ பெருமைப்படுகிறேன்

    ஆனால், தற்போது பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் உலகளவில் நிகழ்த்திய சாதனையால் இந்திய படங்கள் என்கிற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனக்கு மிகவும் பெருமையை அளித்துள்ளது. தென்னிந்திய படங்களை இன்னமும் பிராந்திய மொழி படங்கள் என வரையறுக்க முடியாது. அவையும் இந்திய படங்கள் என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளது என ரொம்பவே உருக்கமாக பேசியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி.

    English summary
    South Indian stars are not getting honours at Bollywood. Actor Chiranjeevi felt bad about his past Delhi Trip and he shared it in recent Acharya pre release function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X