»   »  பிப்ரவரி 26-ம் தேதி பேயாட்டம் போட வரும் சவுகார்பேட்டை!

பிப்ரவரி 26-ம் தேதி பேயாட்டம் போட வரும் சவுகார்பேட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி நடித்துள்ள சவுகார்பேட்டை பேய்ப் படம் வரும் பிப்ரவரி 26 -ம் தேதி வெளியாகிறது.

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் இது.


இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கிறார் . நாயகியாக ராய்லட்சுமி நடித்திருக்கிறார். சரவணன், சுமன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, மனோபாலா, விவேக், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவை சரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.


Sowcarpettai to release on Feb 26th

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வடிவுடையான்.


படம் பற்றி இயக்குநர் வடிவுடையான் கூறுகையில், "சவுகார்பேட்டை முழுக்க முழுக்க பேய் படம். இந்த படம் ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி இருவரது சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனை படமாக இருக்கும். சுமன் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படு வேகமான திரைக்கதையும், படு பயங்கரமான காட்சிகளும் அனைவரையும் ரசிக்க வைக்கும்.


சவுகார்பேட்டை படம் சிறப்பாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் எனக்கு பொட்டு படம் இயக்கும் வாய்பையும் கொடுத்துள்ளார். பொட்டு படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் மற்றுமொரு படத்தை நான் இயக்குகிறேன்.


அந்த படத்தையும் ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ்,ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். அதுவும் பேய் படமா இல்லையா என்பதை விரைவில் அறிவிப்போம். இதே நிறுவனத்தில் நான் இயக்கும் மூன்றாவது படம் அது.
சவுகார்பேட்டை படத்தை இம்மாதம் 26 ம் தேதி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் உலகமுழுவதும் வெளியிடுகிறது," என்றார் வடிவுடையான்.

English summary
VC Vadivudaiyaan directed Srikanth Raai Lakshmi starrer Sowcarpettai movie is releasing on Feb 26th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil