»   »  50 பேய்களுடன் படமாக்கப்பட்டது.. சவுகார்பேட்டை கிளைமாக்ஸ்

50 பேய்களுடன் படமாக்கப்பட்டது.. சவுகார்பேட்டை கிளைமாக்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 பேய்களுக்கு மத்தியில் சவுகார்பேட்டை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்ததாக, படத்தின் இயக்குநர் வடிவுடையான் தெரிவித்து இருக்கிறார்.

ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த் நடித்து வரும் சவுகார்பேட்டை திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படம் பிடித்திருக்கின்றனர்.


படத்தின் முக்கியமான காட்சிகள் கிளைமாக்ஸ் பகுதியில் இடம்பெறுவதால் மிகுந்த சிரத்தையுடன் காட்சிகளை படம் பிடித்திருக்கின்றனராம்.


சவுகார்பேட்டை

சவுகார்பேட்டை

தமிழில் சற்றே ஓய்ந்து போயிருந்த பேய்ப்படங்கள் மீண்டும் சவுகார்பேட்டை மூலமாக தொடங்குகின்றன. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து ராய் லட்சுமி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோபாலா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குநர் வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்து வருகிறார்.


மந்திரவாதியாக ஸ்ரீகாந்த்

மந்திரவாதியாக ஸ்ரீகாந்த்

படத்தில் ஸ்ரீகாந்த் மந்திரவாதியாக நடிக்கிறார், இதற்காக அவர் சில நிஜ மந்திரவாதிகளிடம் பேசிப்பழகி பயிற்சி பெற்று இருக்கிறாராம்.பேய் படங்களை வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் முரளி ராமநாராயணன், சவுகார் பேட்டையை வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறார்.


கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டன, இந்தக் காட்சி படத்தில் சுமார் 15 நிமிடங்களுக்கும் அதிகமாக இடம் பெறுகிறது. இதற்காக 50 பேரை பேயாக நடிக்க வைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இயக்குநர் வடிவுடையான் படம் பிடித்திருக்கிறார்.


ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி

ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி

படத்தில் ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருக்கின்றனராம். இதுநாள் வரை காதல் நாயகனாக வலம்வந்த ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் மந்திரவாதியாக நடித்திருக்கிறார். இதுவரை கவர்ச்சியில் ரசிகர்களைக் கிறங்கடித்த ராய் லட்சுமி இந்தப் படத்தில் பேயாக நடித்து ரசிகர்களை பயமுறுத்தப் போகிறாராம். தற்போதைய நிலவரப்படி டிசம்பர் மாத இறுதியில் சவுகார்பேட்டை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Director Vadivudaiyan says in recent interview "Sowkarpettai climax scene of the film, Recently Shooting with a cast of 50 people. This scene in the movie takes place over approximately 15 minutes".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil