»   »  சவுகார்பேட்டை செப்டம்பரில் ரிலீஸ்… இந்தப் பேய்கள் தமிழ் இந்தி, தெலுங்கும் பேசுமாம்!

சவுகார்பேட்டை செப்டம்பரில் ரிலீஸ்… இந்தப் பேய்கள் தமிழ் இந்தி, தெலுங்கும் பேசுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு பேசப்போகும் பேய் படமான சவுகார்பேட்டை செப்டம்பரில் ரிலீஸ் ஆகப்போகிறது. நடிகைகளுக்கு பேய் வேஷம் கட்டியது போக நடிகர்களும் இப்போது பேயாட்டம் போட ஆரம்பித்து விட்டனர். அழகான ராய் லட்சுமியும், ஸ்ரீகாந்தும் பேயாக வந்து ரசிகர்களை செப்டம்பரில் பயமுறுத்தப்போகின்றனர்

பேய்ல ஆம்பள பேய், பொம்பள பேய் வேற இருக்கா? எல்லா பேயும் ஒண்ணுதானோ? ஆம்பள பேய் புடிச்சா என்ன நடக்கும்? அதுவே பொம்பள பேயா இருந்தா? அந்த பேய் என்ன கேட்கும்? எதுக்கு இத்தனை பேய் என்று யோசிக்கிறீர்களா?


தமிழ்சினிமாவில் இன்றைக்கு பேய்கதைகள்தான் வெற்றி பெருகின்றன. அதனால்தான் பார்ட் 2, பார்ட் 3 என பேய்கதைகளாக தொடர்ந்து வெளியாகின்றன. அழகான நாயகிகளைக் கூட பெரிய பொட்டு வைத்து, தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பேய் வேஷம் போட்டு விடுகின்றனர்.


அடுத்த பேய் ஆரம்பம்

அடுத்த பேய் ஆரம்பம்

ராகவா லாரன்ஸ்தான் நிறைய பேய்களை குத்தகைக்கு எடுத்திருப்பார். எல்லா பேய்களும் வெற்றியைத் தேடித்தரவே எல்லாரும் வரிசையாக பேய் வேஷம் போட ஆரம்பித்துவிட்டனர். இப்போது ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி ஆகியோர் பேய் ஆக உலா வரப்போகின்றனர்.


மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சவுகார் பேட்டை'. தமிழில் ‘சவுகார் பேட்டை' , ஹிந்தியில் ‘பேகம் பேட்டா', தெலுங்கில் ‘தந்திர சக்தி' என்ற பெயரில் மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன்

பேய் படம் என்றாலே மொட்டை ராஜேந்திரன் இல்லாமலா, சவுகார்பேட்டையிலும் மொட்டை ராஜேந்திரனுடன் காமெடி நடிகர்களும், பேய்பட வில்லன் நடிகர்களும் நடிக்கின்றனர்.


கோவை சரளா – மனோபாலா

கோவை சரளா – மனோபாலா

அதென்னவோ பேய் படம் என்றால் கோவை சரளா - மனோபாலா என்று உறுதியாகிவிட்டது. இந்த படத்திலும் இந்த ஜோடி பேயுடன் குடும்பம் நடத்தப்போகிறார்கள்.


இது வேற பேயாம்

இது வேற பேயாம்

இது பேய் கதைதான், ஆனால் பேய் படம் பார்த்த மாதிரி இருக்காது என்று கூறியுள்ளார் இயக்குனர் வடிவுடையான். எடுக்கிறது பேய் படம் இதுல நல்ல மாதிரி என்ன வேற மாதிரி என்ன நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை


English summary
Srikanth and Rai Lakshmi Sowkarpettai Movie will release in three languages in September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil