twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மரணத்தை முன்பே உணர்ந்தாரா? சிலை அமைக்கச் சொன்ன எஸ்பிபி.. ஆசை நிறைவேறாமலேயே மறைந்த சங்கீத மேகம்!

    By
    |

    சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி.பி, தனது சிலையை செய்வதற்காக சிற்பி ஒருவரிடம் கூறியிருந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது லேசான அறிகுறிதான், விரைவில் திரும்பி வருவேன் என்று அவர் கூறியிருந்தார்.

    அவசர சிகிச்சை

    அவசர சிகிச்சை

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

    காலமானார்

    காலமானார்

    பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சில நாட்களுக்கு முன் மோசமானது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 74. அவருடைய மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பண்ணை வீட்டில்

    பண்ணை வீட்டில்

    அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ரசிகர்கள், திரையுலகினர் அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தனது ஆசை நிறைவேறாமலேயே எஸ்.பி.பி மறைந்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.

    வேத பாடசாலை

    வேத பாடசாலை

    பாடகர் எஸ்.பி.பியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கரமடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாகக் கொடுத்தார். இங்கு தனது மறைந்த தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, தாய் சகுந்தலாம்மா ஆகியோர் சிலையை நிறுவ அவர் விரும்பினார்.

    சிலை செய்வதற்கு

    சிலை செய்வதற்கு

    இதற்காக, ஆந்திர சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி, தனது சிலை ஒன்றையும் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். கொரோனா காரணமாக, நேரில் வந்து சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது என்பதால், அதற்கான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    சிற்பி ராஜ்குமார், எஸ்.பி.பி சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் திரும்பி வந்தபின் சிலையை ஒப்படைக்கலாம் என்று ராஜ்குமார் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவர் மறைந்து விட்டார்.

    மரணத்தை உணர்ந்தாரா

    மரணத்தை உணர்ந்தாரா

    திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருந்தால் ஆகஸ்ட் மாதமே, அவர் சிலையும் அவர் பெற்றோர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கும். இதனால் எஸ்.பி.பி தனது மரணத்தை முன்பே உணர்ந்தாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதற்கிடையே எஸ்.பி.பி ஆசைப்படி அவர் குடும்பத்தினர் சிலையை நிறுவ உள்ளனர்.

    English summary
    SPB had ordered for the statues of his parents and wanted to install it at his ancestral house. He had also wished to have his own statue at the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X