For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த பூமியில காற்று இருக்கிறவரை எஸ்.பி.பி நம்மோட வாழ்ந்துட்டே இருப்பார்.. சிவகுமார் உருக்கம்!

  By
  |

  சென்னை: இந்தப் பூமியில் காற்று உள்ளவரை எஸ்.பி.பி நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார் என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

  பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம், 25 ஆம் தேதி மரணமடைந்தார்.

  கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் 51 நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.

  40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி.. தமிழ் சினிமாவில் இந்த 3 ஹீரோக்களுக்கு மட்டும் பாடவே இல்லை!40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி.. தமிழ் சினிமாவில் இந்த 3 ஹீரோக்களுக்கு மட்டும் பாடவே இல்லை!

  அரசு மரியாதை

  அரசு மரியாதை

  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணமடைந்தார். அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கு நேரில் ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

  நடிகர் சிவகுமார்

  நடிகர் சிவகுமார்

  இந்நிலையில் அவருக்கு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று (செப்.30) நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் நடிகர் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய அனுபவங்களை பேசினார்கள். இதில் நடிகர் சிவகுமார் உள்பட சிலர் கலந்து கொள்ளவில்லை.
  இந்நிலையில் நடிகர் சிவகுமார் எஸ்.பி.பி குறித்த தனது அனுபவங்களை பேசி தனியாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

   மல்லிகைப்பூ

  மல்லிகைப்பூ

  அதில் அவர் கூறியிருப்பதாது: எஸ்.பி.பி என்னை விட 5 வயசு சின்னவர். அவர் முதலில் பாடிய பாட்டு, மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்.. என்ற பாடல். பால்குடம் படத்துக்காக. அதுக்கு முன்னாடியே சாந்தி நிலையம் படத்துக்காக இயற்கை எனும் இளைய கன்னி பாடலையும் எம்.ஜி.ஆருக்காக ஆயிரம் நிலவே பாடலையும் ரெக்கார்ட் பண்ணிட்டாங்க.

  முள்ளில்லா ரோஜா

  முள்ளில்லா ரோஜா

  ஆனா, பால்குடம் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு, 1969 ஆம் வருஷம். அப்புறம்தான் அந்த படங்கள் ரிலீஸ் ஆச்சு. அந்த கணக்குப்படி பார்த்தால், எஸ்.பி.பி எனக்குத்தான் முதன் முதலா பாடியிருக்கார். அடுத்தது, மூன்று தெய்வங்கள் படம், இதுல முள்ளில்லா ரோஜா என்ற பாடல். அவருக்கு அப்ப 24 வயசு இருக்கும். அடுத்து கண்காட்சி படத்துல ஒரு பாடல்.

  ரோசாப்பூ ரவிக்கைக்காரி

  ரோசாப்பூ ரவிக்கைக்காரி

  சிட்டுக்குருவி படத்துல என் கண்மணி உன் காதலி பாடல். இதை ஓடுற பஸ்சுலயே எடுத்தாங்க. நானும் என் மனசாட்சியும் பாடற மாதிரியான பாடல். அடுத்து என்னோட நூறாவது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரியில, உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சக்கிளி பாடல். இந்தப் பாடல் எஸ்.பி.பிக்கும் இளையராஜாவுக்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த பாடல்.

  மறக்க முடியாத

  மறக்க முடியாத

  இந்தப் படத்தோட வெளியீட்டுக்கு முன்னால எம்.ஜி.ஆர் தலைமை தாங்கி 100 தயாரிப்பாளர்களுக்கு ஷீல்டு கொடுத்தார். நூறாவது நாள்ல சிவாஜி எல்லாருக்கும் கேடயம் கொடுத்தார். மறக்க முடியாத படம் அது. அடுத்து அக்னிசாட்சி படத்துல வரும், கனாகாணும் கண்கள் மெல்ல என்று தொடங்கும் பாடல். நல்லா உருகி பாடியிருப்பார்.

  வாழ்ந்த கலைஞன்

  வாழ்ந்த கலைஞன்

  என் தம்பி பாலு, முழுசா வாழ்ந்த கலைஞன். தான் சுவாசிச்சு வெளிய விட்ட காத்தை எல்லாம் பாடலாக்கியவர். இல்லைன்னா, 48 ஆயிரத்துக்கு மேலான பாட்டை பாட முடியுமா? 6 தேசிய விருதுகள், ஒரே நாள்ல 19 பாட்டு பாடியிருக்கார், இப்படியொரு உலக ரெக்கார்ட் யாருமே பண்ண முடியாது. இந்த பூமியில காத்து உள்ளவரைக்கும் ஒலி உள்ளவரைக்கும் எஸ்.பி.பி, சிரஞ்சீவியா வாழ்ந்துட்டே இருப்பார். இவ்வாறு கூறியுள்ளார்.

  English summary
  SP Balasubrahmanyam's first song is for me, not MGR, claims Sivakumar in his latest video
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X