twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா - விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!

    By Shankar
    |

    பேராண்மை படத்துக்குப் பிறகு எஸ் பி ஜனநாதன் இயக்கும் புதிய, படத்துக்கு புறம்போக்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    முதல்முறையாக ஆர்யா - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர் இந்தப் படத்தில். யுடிவி தயாரிக்கும் இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோர்க்கிறார்கள்.

    தமிழ்ப் பற்றாளரான ஜனநாதன் எப்படி தன் படத்துக்கு இந்தத் தலைப்பை வைத்தார் என்று கேட்டால், அதற்கும் அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

    அது என்ன புறம்போக்கு?

    அது என்ன புறம்போக்கு?

    புறம்போக்கு என்பதை கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது. ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும்.

    15 வகை புறம்போக்கு...

    15 வகை புறம்போக்கு...

    புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்பதல்ல. அது பொதுச்சொத்து என்று பொருள். ஊரில் குடியிருப்பு தவிர்த்து பொதுத் தேவைக்கு நிலங்களை ஏரிபுறம் போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம் போக்கு, மந்தைவெளி புறம்போக்கு என்று 15 வகைகளாகப் பிரித்து வைத்தனர். மக்கள் தொகை பெருகி குடியிருப்பு தேவைக்கு ஏற்ப குடியிருக்க வீடுகள் கட்ட நத்தம் புறம்போக்கு என்று விட்டு வைத்தனர். பொதுசாலை, பேருந்து நிலையம், பள்ளி, மருத்துவமனை கட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது புறம்போக்கு நிலங்களில்தான்.

    விண்வெளி கூட

    விண்வெளி கூட

    அப்படி மக்கள் தேவைக்காக இருந்த, பொதுஇடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம்.

    புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம். மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும் கூட புறம் போக்குதான்.எதுவும் தனியுடை மையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான்." என்று புறம்போக்கு பற்றி முற்போக்கு கருத்துகளை கூறுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..

    ஏன் இந்த இடைவெளி?

    ஏன் இந்த இடைவெளி?

    ஜனநாதன் இயக்கிய 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' மூன்று படங்களிலுமே அடித்தட்டு மக்கள் பற்றிய சிந்தனைகளை ஆழமாக விதைத்தவர். இவர் இயக்கத்தில் நடித்த நாயகர்களின் முந்தைய பிம்பங்களை உடைத்தவர். இவரது படத்தில் பங்கேற்ற பின் அவர்களது முகங்கள் மாறின. முன்னேற்றப் படிகளில் ஏறினர்.

    படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணமே முக்கியம் என்று எண்ணுபவர் ஜனநாதன். பணத் திருப்தியை விட மன திருப்தியே பெரிது என்பதால் நல்ல கதை, களம், கலைஞர்கள் கிடைக்கும் வரை காத்திருந்தார்.

    யுடிவி

    யுடிவி

    யூடிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸுடன் இணைந்து திரைப்படத் துறையில் படைப்பு, தயாரிப்பு, சந்தை, விநியோகம், உரிமம், வணிகம், என பல்வேறு தளங்களில் ஈடுபட்டு இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 'ரங்தே பசந்தி' முதல் அண்மைப் படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரை இந்தியில் மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் படங்கள் யூடிவி தயாரிப்புகளாக இருந்து வருகின்றன. யூடிவி தயாரிப்புகளில்கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு படங்கள் அகடமி அவார்டுக்கான பங்கேற்பில் தேர்வாயின.

    தென்னிந்தியாவில்...

    தென்னிந்தியாவில்...

    2011 முதல் தென்னிந்திய திரையுலகில் கிளைபரப்பியிருக்கிற இந்நிறுவனம் தமிழில் தயாரித்த 'தெய்வத் திருமகள்', 'தாண்டவம்' 'சேட்டை' 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்கள் வெவ்வேறு விதத்தில் பேசப்பட்டவை.

    சினிமாவை இந்திய அளவில் விசாலமாக்கி உலகளவில் கொண்டு சேர்க்கிற இந்நிறுவனம் 80 படங்கள் பங்களிப்பு செய்துள்ளது. இவை 50 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 350 விருதுகளைக் குவித்துள்ளன.

    யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தி வால்ட்டிஸ்னி ஸ்டுடியோஸ் கூட்டணியில் 'இவன்வேற மாதிரி' 'சிகரம்தொடு' படங்கள் இப்போது தயாரிப்பில் உள்ளன. 'புறம்போக்கு' படம் அறிவிக்கப் பட்டுள்ளது. உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். ஒளிப்பதிவு ஏகாம்பரம். எடிட்டிங் வி.டி.விஜயன்

    தனஞ்செயன்

    தனஞ்செயன்

    'புறம்போக்கு' படம் மூலம் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைவதில் மகிழ்ச்சி தெரிவிக்கும் யூடிவியின் தென்னிந்தி ய முதன்மை செயல் அலுவலர் ஜி.தனஞ்செயன், படப்பிடிப்புக்கு ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, சென்னை என பயணப்பட உள்ளதையும் கூறினார். வரும் அக்டோபரில் தொடங்குகிற இப்படம் 2014 ஏப்ரலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பைனரி பிக்சர்ஸ்

    பைனரி பிக்சர்ஸ்

    ஆர்யா, விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியே புதிய எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. யூடிவியுடன் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

    English summary
    UTV and SP Jananathan join hands for the first time and their project has titled as Purambokku.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X