twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூப தரிசனம்...எஸ்பிபி., கடைசியாக பாடிய இசை ஆல்பம் வெளியீடு

    |

    சென்னை : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக இசை ஆல்பத்தை சிம்பனி ரெக்கார்டிங் நிறுவனமக வெளியிட்டுள்ளது.

    Recommended Video

    Srihari | Dolby யில் முதலில் வெளியாகும் தமிழ் Album | Vishwaroopa Darisanam #Launch

    பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவில் காலத்தால் மறக்க முடியாத நபர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகராக விளங்குபவர் எஸ்பிபி. பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர்.

    எஸ்பிபி.,க்காக இசையஞ்சலி

    எஸ்பிபி.,க்காக இசையஞ்சலி


    கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவிற்கு பிந்தைய தாக்கம் காரணமாக 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி உயிரிழந்தார். எஸ்பிபி உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஜுன் 4 ம் தேதியான இன்று எஸ்பிபி..,யின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலர் அவருக்காக இசையஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

     எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல்

    எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல்

    எஸ்பிபி.,யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கடைசியாக பாடிய விஸ்வரூப தரிசனம் என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம் எஸ்பிபி.,யின் மரணத்திற்கு முன் ரெக்கார்ட் செய்யப்பட்டது. குருஷேத்திரத்தில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் பேசிக் கொள்வதாக இந்த இசை ஆல்பம் அமைக்கப்பட்டுள்ளது. குருநாதா சித்தர் எழுதி இந்த பாடலுக்கு கே.எஸ்.ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

    சிம்பொனி சொன்ன தகவல்

    சிம்பொனி சொன்ன தகவல்

    இந்த இசை ஆல்பம் பற்றி சிம்பொனியின் சிஇஓ ராஜேஷ் துபட் கூறுகையில், 2017 ம் ஆண்டு முதல் இந்த இசை ஆல்பத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. பல மொழிகளில் இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டது. பாடலின் வரிகள் மிக சிம்பிளாக, அதே சமயம் எமோஷனலாக இருக்க வேண்டும் என கேட்டிருந்தேன். அதன் படி ஆயிரம் ஆயிரம் என துவங்குவதாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை யாரை பாட வைக்கலாம் என பாடகர்களை தேடி வந்தோம். முதலில் கர்நாடக இசை கலைஞர்களையே பாட வைக்க நினைத்தோம்.

    பிளஸ் பாயின்ட் இது தான்

    பிளஸ் பாயின்ட் இது தான்

    முதலில் எஸ்பிபியை நான் நினைக்கவேயில்லை. ஆறு மாதங்களாக பாடகரை தேடிய பிறகு தான், இதற்கு எஸ்பிபி.,யின் குரல் தான் சரியாக இருக்கும் என தோன்றியது. அவரது வழக்கமான பாடலும் ஸ்டையிலை சற்று மாற்றி இந்த இசை ஆல்பத்தை பாட சொன்னோம். மிக கடினமான இடங்களிலும் மிக எளிதாக பாடினார் எஸ்பிபி. அது தான் இந்த ஆல்பத்தில் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் என தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆல்பத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டு, லாக்டவுன் முடிந்த பிறகே தொடர்ந்தோம். ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக எஸ்பிபி.,யை நாம் இழந்து விட்டோம் என்றார்.

    புது அனுபவமாக இருக்கும்

    புது அனுபவமாக இருக்கும்


    பகவத் கீதையில் 3 அத்தியாயங்களை மையமாக வைத்து, 9 ராகங்களின் அடிப்படையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்பிபி.,யின் இசை காதலர்களுக்கு நிச்சயம் இது ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும், தென்னிந்தியாவில் Dolby யின் திரைப்படம் அல்லாத ஆல்பம் இது தான் என ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆனாலைன் இசை தளங்களான Dolby Atmos sound in Apple Music, Hungama Music உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    SPB's last album Vishwaroopa Darisanam was released due to late legendary singer SPB's birthday. Symphony's this album was based on Bagawad gita and based on 9 ragas. This music album was now streaming in online streaming platforms.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X