»   »  அமெரிக்காவில் கச்சேரி: எஸ்.பி.பி.க்கு வந்த அடுத்த சோதனை

அமெரிக்காவில் கச்சேரி: எஸ்.பி.பி.க்கு வந்த அடுத்த சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் பாஸ்போர்ட், கிரெட்டி கார்டுகள் இருந்த பை திருடு போயுள்ளது.

எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் வெளிநாடுகளில் இசை கச்சேரி நடந்து வருகிறது. எஸ்.பி.பி. சரண் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. கலந்து கொண்டு பாடி வருகிறார்.

SPB's passport, credit cards stolen in USA

தற்போது அமெரிக்காவில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கம் உள்ளிட்டவை இருந்த பை திருடு போயுள்ளது.

இது குறித்து எஸ்.பி.பி. உடனே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அவருக்கு 24 மணிநேரத்திற்குள் மாற்று பாஸ்போர்ட் அளித்துள்ளனர்.

இதை எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. இசைஞானியின் பாடல்களை பாட அவரோ தன்னிடம் அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என்றார் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Legendary singer SPB's bag with his passport, credit cards, cash was stolen while he is touring in the USA.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil