»   »  ரஜினியுடன் படம் எடுத்துக் கொள்ள ரசிகர்களுக்கு 'பார் கோடுடன்' கூடிய அனுமதி அட்டை!

ரஜினியுடன் படம் எடுத்துக் கொள்ள ரசிகர்களுக்கு 'பார் கோடுடன்' கூடிய அனுமதி அட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

8 ஆண்டுகளுக்குப் பிறகு தன் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி. ஆனால் இதை சந்திப்பு என்று சொல்ல வேண்டாம்... வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என்றே கூற வேண்டும் என்கிறது ராகவேந்திரா மண்டப வட்டாரம்.

இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து ரசிகர்களுக்கும் பார் கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரஜினியின் நேரடி மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட அடையாள அட்டை இது. அந்த அட்டையை ஸ்கேன் செய்த பிறகே படமெடுத்துக் கொள்ள அனுமதி கிடைக்கும்.


Special ID cards issued to Rajini fans

மே 15 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வு. நாளொன்றுக்கு 1000 முதல் 1500 ரசிகர்களுடன் ரஜினி படமெடுத்துக் கொள்ள உள்ளார்.


படமெடுத்துக் கொள்ள வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த 5 நாட்களும் காலை சிற்றுண்டி, மோர், பிற்பகல் உணவு, மாலை சிற்றுண்டி என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


வெளியூரிலிருந்து வரும் ரசிகர்கள் அனைவரும் காலை 7 மணிக்கே மண்டபத்துக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மண்டபத்தில் ரசிகர்களுடன் ஆலோசனை, கலந்துரையாடல் என எதிலும் ரஜினி பங்கேற்கப் போவதில்லையாம். அதே போல மாலை, பரிசுகள், காலில் விழுதல் என எதுவும் இருக்கக் கூடாது என்பதையும் ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கிறார்கள்.


அடையாள அட்டை இல்லாத அல்லது போலியான அடையாள அட்டைகளோடு வருபவர்கள் நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே வந்து தர்மசங்கடப்பட வேண்டாம் என ஏற்கெனவே ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
There is a specially designed ID cards with bar code has been issued to Rajini fans to participate in photo taking event with the Superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil