Just In
- 11 min ago
சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் டீசர் மட்டும் தானா படம் எப்போ?
- 1 hr ago
சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
- 1 hr ago
ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!
- 2 hrs ago
கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
பின்னணியில் நடந்து டீலிங்.. ராபின் உத்தப்பாவை விடாப்பிடியாக கேட்டு வாங்கிய தோனி.. பரபரப்பு காரணம்!
- News
லாட்ஜில் ரூம் போட்ட "ஆண்ட்டி".. அந்தரங்க வீடியோ எடுத்து.. கடைசியில் சிக்கியது யாருன்னு பார்த்தீங்களா
- Automobiles
இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!
- Lifestyle
ஆண்களே! உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நரேந்திர மோடிக்காக மும்பையில் கோச்சடையான் சிறப்புக் காட்சி?
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ரஜினியின் 'கோச்சடையான்' படத்தை திரையிட்டு காட்ட முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் அதிநவீன தொழில்நுட்பப் படமாக வெளியாகிறது கோச்சடையான்.

இந்தப் படம் வரும் மே 9-ம் தேதி உலகெங்கும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தினை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தினை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனியாக திரையிட்டு காட்டப் போகிறார்களாம்.
இந்த சிறப்புக் காட்சி மும்பையில் நடக்கிறது. பாலிவுட் பிரபலங்கள் அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோருடன் மோடியும் இந்தக் காட்சியைப் பார்ப்பார் என்கிறார்கள்.
படத்தின் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்பாக இந்த சிறப்புக் காட்சி நடக்கிறது. ரஜினியும் இதில் பங்கேற்பார் என்கிறார்கள்.
அதே நேரம் சென்னையிலும் தமிழ் திரையுலகினருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம்.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரிக்கையில், "இரண்டு சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ரஜினி எந்த காட்சிக்கு வருவார் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்," என்றனர்.
ஏற்கெனவே ரஜினி - மோடி சந்திப்பு வடக்கில் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியுடன் கோச்சடையானை நரேந்திர மோடி பார்த்தால் அது வட இந்தியாவில் படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸாக அமையும் என்று பாலிவுட் விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.