twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீ்ட்டில் குடும்பத்தோடு விஸ்வரூபம் பார்த்த ரஜினி

    By Sudha
    |

    சென்னை: விஸ்வரூபம் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே குடும்பத்தோடு பார்த்து ரசித்தார். படமாக்கத்தையும், கமல்ஹாசனின் நடிப்பையும் அவர் வெகுவாகப் புகழ்ந்தார்.

    விஸ்வரூபம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் விழாக் கோலம் பூணடு படத்தைப் பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று திரையுலகினருக்காக படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். இதில் கமலுடன் சேர்ந்து திரையுலகமே திரண்டு வந்து படம் பார்த்தது.

    சரத்குமாரும் வந்தார்

    சரத்குமாரும் வந்தார்

    நடிகர் சங்கத் தலைவரான சரத்குமாரும் விஸ்வரூபம் பார்க்க வந்திருந்தார்.

    வீட்டில் வைத்து ரஜினி பார்த்தார்

    வீட்டில் வைத்து ரஜினி பார்த்தார்

    தனது நண்பரான ரஜினிக்கு வீட்டிலேயே இருந்து குடும்பத்தோடு படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் கமல்ஹாசன். இதனால் ரஜினி தனது குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடி படத்தைப் பார்த்து ரசித்தாராம். மேலும் படமாக்கமும், கமலின் நடிப்பும் பிரமாதம் என்றும் பாராட்டினாராம்.

    ரஜினி குறித்து கமல் பெருமிதம்

    ரஜினி குறித்து கமல் பெருமிதம்

    ரஜினி படம் பார்ப்பது குறித்து கமல் கூறுகையில், நண்பர் ரஜினி, எனது குடும்பத்தின் விரிவுடுத்ப்பட்ட ஒரு உறுப்பினர். அவர் தனது குடும்பத்துடன் தனது வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்து வருகிறார் என்றார் கமல்.

    மிரட்டி வி்ட்டார் கமல் - குஷ்பு

    மிரட்டி வி்ட்டார் கமல் - குஷ்பு

    படம் பார்த்த நடிகை குஷ்பு கூறுகையில், இன்னும் நான் மிரட்சியிலிருந்து மீளவி்ல்லை. ஹாலிவுட்டையும் தாண்டிப் போய் விட்டார் கமல். பிரமாண்டம் என்றால் இதுதான். மிரட்டி விட்டார் கமல். இதில் நடிக்காமல் போய் விட்டோமே என்று வருத்தப்படுகிறேன். இதன் தொடர்ச்சியில் நடிக்க வைப்பார் என்று நம்புகிறேன்.

    தவறாக எதுவும் இல்லையே

    தவறாக எதுவும் இல்லையே

    இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சி எதுவும் இல்லை என்பது எனது கருத்து. ஆப்கானிஸ்தானை யாருமே இவ்வளவு அழகாக காட்டியதில்லை. முஸ்லீம்களை சரியான முறையில்தான் காட்டியுள்ளார் கமல் சார். நான் ஒரு முஸ்லீம். நீங்கள் எதையும் பார்ப்பதில்தான் இருக்கிறது என்றார் குஷ்பு.

    அருமையான படம் -மும்தாஜ்

    அருமையான படம் -மும்தாஜ்

    நடிகை மும்தாஜ் கூறுகையில், மிகவும் அருமையான படம். அருமையான கேமரா. படத்தில் முஸ்லீம்களைத் தவறாக சித்தரித்து ஒரு காட்சி கூட இல்லை. நான் ஒரு முஸ்லீம். உண்மை என்னவோ அதை காட்டியுள்ளார் கமல் சார் என்றார்.

    கமல்ஹாசனின் பெரிய முயற்சி

    கமல்ஹாசனின் பெரிய முயற்சி

    படம் பார்க்க வந்த சரத்குமார் கூறுகையில், இது மிகப் பெரிய முயற்சி. ஆங்கிலப் படம் பார்ப்பது போலவே இருந்தது. பெஸ்ட் ஆப் லக் என்றார்.

    அருமையான படம் - ராதிகா

    அருமையான படம் - ராதிகா

    கமலுக்குப் பிரச்சினை வந்தபோது அவரது வீடு தேடி வந்து ஆறுதலாக பேசிய ராதிகா கூறுகையில், மிகவும் அருமையான படம். கமல்ஹாசன் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார். முஸ்லீம்கள் குறித்து ஒரு தவறான காட்சி கூட இல்லை என்றார்.

    சந்தோஷமாக காணப்பட்ட கமல்

    சந்தோஷமாக காணப்பட்ட கமல்

    சில நாட்களுக்கு முன்பு உணர்ச்சிகரமாக காணப்பட்ட கமல்ஹாசன், தனது திரையுலக சகோதரர்கள் படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டித் தள்ளியதைக் கண்டு சந்தோஷமான முகத்துடன் காணப்பட்டார்.

    English summary
    A day before the film finally releases in Tamil Nadu, Kamal Haasan screened his Vishwaroopam at two premieres for his friends in Kollywood, Chennai's film industry. One of those was held exclusively for superstar Rajinikanth at his residence. Rajinikanth was one of the few actors who vocally supported Kamal Hassan right through the state's ban on his Rs.-95 crore film and had even appealed to the Muslim groups who had objected to the film, to let it release. Kamal Haasan said, "Mr Rajinikanth is like my extended family and he's watching the film at his home with his family".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X