»   »  முத்தத்தில் கைவைத்தாலும் வசூலில் குறைவைக்காத ஸ்பெக்டர்

முத்தத்தில் கைவைத்தாலும் வசூலில் குறைவைக்காத ஸ்பெக்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் முத்தத்தில் கைவைத்து இந்திய ரசிகர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டாலும் வசூலில் ஸ்பெக்டர் திரைப்படம் சோடை போகவில்லை.

இதற்கு முன் வெளிவந்த ஸ்கைபால் படத்தின் முதல்வார வசூலை முறியடித்து இந்தியன் பாக்ஸ் ஆபிசில் தனக்கென்று ஒரு தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஸ்பெக்டர்.

வெளியான முதல் வாரத்தில் சுமார் 23.50 கோடிகளை வசூலித்திருக்கிறது டேனியல் கிரெய்க்கின் ஸ்பெக்டர்.

ஸ்பெக்டர்

ஸ்பெக்டர்

இந்தியாவில் கடந்த 20 ம் தேதி டேனியல் கிரெய்க் - மோனிகா பெல்லுச்சி மற்றும் பல ஹாலிவுட் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ஸ்பெக்டர் திரைப்படம் வெளியானது. இந்தியா முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருந்தது.

முத்தத்தை கட் செய்த அதிகாரிகள்

முத்தத்தை கட் செய்த அதிகாரிகள்

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் சிறப்பே ஆழமான முத்தக் காட்சிகள் தான். ஆனால் இது எங்கள் கலாச்சாரத்தை சீரழித்து விடும் என்ற நல்ல எண்ணத்தில் இந்திய தணிக்கைக் குழுவினர் படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளை பாரபட்சம் பாராமல் வெட்டித் தள்ளினர்,

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

எப்படி எங்கள் உரிமையில் நீங்கள் கைவைக்கலாம் என்று இந்திய ரசிகர்கள் பொங்கியெழுந்து சமூக வலைதளங்களில் தங்கள் ஆத்திரம் மற்றும் கோபங்களை கொட்டித் தீர்த்தனர். இவர்களின் கோபத்தைப் பார்க்கையில் படம் வசூலில் பின்தங்கி விடுமோ என்ற பயம் அனைவரின் மனத்திலும் எழுந்தது.

திட்டிக் கொண்டே

திட்டிக் கொண்டே

முத்தக் காட்சியை கட் செய்ததை திட்டிக் கொண்டே இந்திய ரசிகர்கள் ஸ்பெக்டர் திரைப்படத்தை ரசித்திருக்கின்றனர் போலும். இல்லாவிடில் இப்படி ஒரு வசூல் சாத்தியமாகுமா என்ன? ஸ்பெக்டர் வெளியான முதல் வாரத்தில் இதுவரை சுமார் 23.50 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

ஸ்கைபாலை முந்திய ஸ்பெக்டர்

ஸ்கைபாலை முந்திய ஸ்பெக்டர்

3 வருடங்களுக்கு முன்னர் வெளியான ஸ்கைபால் திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 23 கோடிகளை வசூலித்து இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியான ஸ்பெக்டர் திரைப்படம் 23.50 கோடிகளை வசூலித்து ஸ்கைபால் படத்தின் முதல்வார வசூலை முறியடித்து இருக்கிறது.

English summary
Daniel Craig's Spectre Movie Collects 23.50 Crore in Indian Box Office. This Movie also Beats Skyfall First Week end Collection in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil