»   »  பொதுக் குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்?- நாசர்

பொதுக் குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்?- நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுக்குழுவைக் கூட்டாமல் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை சரத்குமார் ரத்து செய்தது ஏன் என்று நடிகர் சங்க புதிய தலைவர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்க நிலத்தை சத்யம் சினிமாஸுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தம்தான், இவ்வளவு பரபரப்பு மற்றும் தேர்தலுக்கே காரணமாக அமைந்தது.

SPI cinema agreement cancellation: Nasser questioned Sarathkumar

இந்த ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்து, அதற்கான கடிதத்தை வைத்துக் கொண்டு அமைதி காத்திருக்கிறார் சரத்குமார்.

காரணம் கேட்டபோது, தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை, வெற்றி பெற்று வந்தபிறகு இந்த ஒப்பந்த ரத்தைக் காட்டி, பூச்சி முருகனின் வழக்கை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் தேர்தல் முடிவு எதிர்ப்பார்த்தற்கு மாறாக வந்ததால் இப்போது அறிவிப்பதாகக் கூறினார் சரத்குமார்.

ஆனால் இதனை விஷால் தரப்பு ஏற்பதாக இல்லை.

புதிய தலைவராகியிருக்கும் நாசர், "அதெப்படி சரத்குமார் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்? வழக்கு நிலுவையிலிருக்கும்போது இப்படிச் செய்ய முடியுமா? செயற்குழு, பொதுக் குழு என்று எதிலும் கலந்து பேசாமல் ஒப்பந்ததை ரத்து செய்தது ஏன்? ஒப்பந்தம் போடும்போது செயற்குழுவைக் கூட்டியதாகச் சொன்னாரே... ரத்து செய்யும் போதும் கூட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதே நேரம் நடிகர் சங்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் ஒப்பந்தத்தை சரத்குமார் ரத்து செய்திருக்கிறார். எனவே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய கட்டடம் கட்ட வழியைப் பாருங்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Nasser, the new president of Nadigar Sangam has questioned the genuinity of cancellation SPI cinema agreement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil