»   »  எங்க ஏரியா... மீட்கப்பட்ட நடிகர் சங்க இடத்தைப் போய்ப் பார்த்து சந்தோஷித்த நடிகர், நடிகையர்!

எங்க ஏரியா... மீட்கப்பட்ட நடிகர் சங்க இடத்தைப் போய்ப் பார்த்து சந்தோஷித்த நடிகர், நடிகையர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ரத்து செய்திருக்கின்றனர். இதையடுத்து மீட்கப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்து சந்தோஷித்தனர் நடிகர் நடிகையர்.

கடந்த ஆண்டு நடிகர் சங்கம் சரத்குமார் அணி, விஷால் அணி என்று இரண்டாக உடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட விஷால் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்குக் காரணமே, நடிக் சங்க இடம்தான்.

இந்நிலையில் நேற்று எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த கையோடு நடிகர் சங்க நிர்வாகிகள் சங்க நிலத்தை நேரில் சென்று பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எஸ்பிஐ சினிமாஸ்

எஸ்பிஐ சினிமாஸ்

எஸ்பிஐ சினிமாஸ் வசம் இருந்த நடிகர் சங்க நிலத்தை நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்டிருக்கின்றனர். நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வ இதனை அறிவித்தனர். மேலும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு இல்லாமல் நேரில் சென்று நிலத்தைப் பார்வையிட்டு தங்களது மகிழ்ச்சியை நடிக, நடிகையர் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்

இந்த நிகழ்ச்சியில்

நடிகர் சங்கத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, சங்கத் துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, லலிதா குமாரி, சங்கீதா, ஜூனியர் பாலையா, சோனியா, பசுபதி, ஸ்ரீமன், டி.பி.கஜேந்திரன், உதயா, பிரேம்குமார், அயூப்கான், நியமண செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், சிறப்பு விருந்தினர்கள் சத்யராஜ், பிரபு, ஐசரிகணேஸ் , ராஜேஸ்வரி, ஆர்.கே.சுரேஸ் , பவன் ,பொது மேலாளர் பால முருகன் மற்றும் ஏ.ஆர்.ஒக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கியக் காரணமே

முக்கியக் காரணமே

ஒன்றாக இருந்த நடிகர் சங்கம் பிளவுபட்டு ரெண்டாக உடைவதற்கு இந்த சங்க நிலம் தான் மிகப்பெரிய காரணியாக இருந்தது. இந்த காரணத்தால் தான் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக் கொண்டனர். இதனால் தான் வழக்குப் போட்டனர். இந்த நிலம் காரணமாகத் தான் அமைதியாக இதுவரை நடைபெற்று வந்த சங்கத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அளவுக்கு பரபரப்பான விஷயமாக மாறியது.

அனைவரும் சென்று

அனைவரும் சென்று

கடைசியில் நேற்று நிலம் மீட்கப்பட்ட செய்தி அறிந்ததும் நடிக, நடிகையர் அனைவரும் திறந்து சென்று பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சந்தோஷ ஆரவாரம் செய்தனர்.

சங்கத் தேர்தல்

சங்கத் தேர்தல்

கடந்த ஆண்டு நடைபெற்ற சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட விஷால் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதனைத் தொடர்ந்து தேர்தலில் குருதட்சணை திட்டம் உட்பட மொத்தம் 42 திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக நாசர் தலைமையிலான அணி அறிவித்தது.

எஸ்பிஐ சினிமாஸ்

எஸ்பிஐ சினிமாஸ்

அந்த வாக்குறுதிகளில் செயற்குழு, பொதுக்குழுவின் ஒப்புதலோடு SPI ஒப்பந்தத்தை ரத்து செய்து, நமது சங்க நிலத்தை நமதாக்குவோம் என்பது முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது. இந்நிலையில் பொறுப்பேற்று 4 மாதங்கள் முடிந்த நிலையில் நேற்று எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர். இதன்படி தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நேற்று நாசர் அணி நிறைவேற்றி இருக்கிறது.

சங்கக் கட்டிடம்

சங்கக் கட்டிடம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பின்னர் நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், பிரபு, சத்யராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நடிகர் சங்க நிலத்தைப் பார்வையிடும்போது அங்கு சில ஆலோசனைகளும் நடந்துள்ளது. இதனால் விரைவில் அந்த இடத்தில் நடிகர் சங்கக் கட்டிடம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 கோடிக்கும்

2 கோடிக்கும்

எஸ்பிஐ சினிமாஸ் உடனான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு மட்டும் சுமார் 2 கோடியே 48 லட்ச ரூபாயை நடிகர் சங்கம் செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை நடிகர்கள் யாரும் கைக்காசைப் போட்டுக் கொடுத்தது போலத் தெரியவில்லை. மாறாக, ஐசரி கணேஷ்தான் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிகிறது.

English summary
South Indian Artistes Association Yesterday has Announced the Cancellation of Contract with SPI Cinemas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil