»   »  தாணுவின் ஒருதலைப்பட்சமான முடிவு... உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்!

தாணுவின் ஒருதலைப்பட்சமான முடிவு... உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரின் அணிக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் நிற்கும் என கலைப்புலி தாணு நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாணுவின் இந்த முடிவு பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதால், தயாரிப்பாளர் சங்கமே இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளது.

Split in Tamil Film Producers council?

இதற்கு முன் எப்போதும் பார்த்திராத அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது நடிகர் சங்கத் தேர்தல். இதில் நாளுக்கு நாள் விஷால் அணியினரின் கை ஓங்கி வருகிறது. விஷால் அணியையும் சரத்குமார் அணியையும் சந்திக்க வைத்து சமரசம் பேசலாம் என்று கலைப்புலி தாணு எடுத்த முயற்சிகளுக்கு விஷால் அணி சம்மதிக்கவில்லை.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு சமரசம்..? இது நடிகர் சங்கப் பிரச்சினை. இதில் தயாரிப்பாளர் சங்கம் ஏன் தலையிட வேண்டும்? தேர்தலில் வெல்லும் அணியை வாழ்த்துவது மட்டும்தான் உங்கள் வேலை என்று விஷால் தரப்பு கூறிவிட்டது. இதனால் சரத்குமார் அணியை ஆதரிக்க தாணு முடிவு செய்துவிட்டார்.

ஆனால் தனது இந்த முடிவையே தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவாக அவர் அறிவித்துவிட்டார். இதனை ஏ எல் அழகப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

"சினிமா வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லை. வேறு ஒரு சங்கத்தின் தேர்தல் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஒரு சார்பாக எப்படி முடிவு எடுக்கலாம்? பெருமளவு நடிகர்கள் விஷால் அணியில் உள்ளனர். மூத்த நடிகர்கள் அங்கு உள்ளனர். 'இவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை, சரத்குமார், ராதாரவியை மட்டும்தான் ஆதரிக்கிறோம்' என்று தாணு பகிரங்கமாகக் கூறுவது மிகப் பெரிய தவறு. இதில் ஏதோ கூட்டுச் சதி இருப்பதாக சந்தேகிக்கிறேன்," என்கிறார் ஏஎல் அழகப்பன்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், "தாணுவின் முடிவு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவாகாது. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் தேர்தல் இது. ஜனநாயக முறைப்படி இரு அணிகள் போட்டியிடுகின்றன. அதில் ஒரு அணிக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கமே களமிறங்குவது எத்தனை பெரிய கேலிக் கூத்து," என்றார்.

தாணுவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் வரும் அக்டோபர் 15-ம் தேதி தனி கூட்டம் ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் தாணு மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகக் குழுவுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

English summary
A section of producer council members have strongly opposed the decision of Tamil Film Producer Council to support Sarathkumar team in Nadigar Sangam election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil