»   »  ஐஸ்வர்யா ராயுடன் லடாய், பிரிவு: மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராயுடன் லடாய், பிரிவு: மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் பிரியப் போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்பதை அபியே தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் பட நிகழ்ச்சிக்கு அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவரையும் ஜோடியாக புகைப்படம் எடுக்க விரும்பிய பத்திரிகையாளர்கள் அவர்களை சேர்ந்து நிற்குமாறு கூறினர்.

Splitsville: Abhishek Bachchan breaks silence

அபிஷேக்கோ, ஐஸ்வர்யாவை வைத்து போட்டோ எடுங்கள் என கூறிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரியப் போகிறார்கள் என்ற பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து அபிஷேக் கூறுகையில்,

நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு காதலிக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். அதே போன்று அவர் என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறார் என்பது எனக்கு தெரியும். இந்நிலையில் மீடியாக்கள் எங்கள் உறவை பற்றி யூகிக்க முயற்சித்தால் தாராளமாக செய்யுங்கள்.

என்னால் மீடியாக்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்க முடியாது என்றார்.

English summary
Bollywood actor Abhishek Bachchan has finally broke the silence about him and Aishwarya Rai parting ways.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil