twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Radhe Spoiler Alert: தர்பார், போக்கிரி, கஜினி மிக்ஸ் பண்ணி அடிச்சா ராதே ரெடி.. அந்த அவுட்லாஸ்?

    |

    மும்பை: பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் தயாரித்து நடித்துள்ள படம் ராதே ரம்ஜான் விருந்தாக வெளியாகி உள்ளது.

    ஏகப்பட்ட மசாலாக்களை போட்டு கிண்டிய இந்த பிரியாணியில் திரைக்கதை எனும் கறி பீஸே இல்லாதது தான் பெரிய குறை.

    வாரிச் செல்லும் கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் தயாரிப்பாளர் மரணம்! வாரிச் செல்லும் கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் தயாரிப்பாளர் மரணம்!

    கொரிய திரைப்படமான அவுட்லாஸ் படத்தின் ரீமேக் உரிமையை எதற்காக வாங்கினார்கள் என்கிற கேள்வியைத் தான் படத்தை பார்த்த ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    போன ரம்ஜானுக்கே

    போன ரம்ஜானுக்கே

    போன ரம்ஜானுக்கே வெளியாக வேண்டிய இந்த படம் தியேட்டர்கள் திறக்காததால் தள்ளிப் போனது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையிலும், ரம்ஜானுக்கே படத்தை ரிலீஸ் செய்வேன் என சல்மான் கான் திட்டவட்டமாக இருந்தார். கொரோனா 2வது அலை காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், வேற வழியில்லாமல் ஒடிடியில் pay per view மூலம் படத்தை ரிலீஸ் செய்து விட்டார்.

    அவுட்லாஸ் ரீமேக்

    அவுட்லாஸ் ரீமேக்

    கொரிய திரைப்படமான அவுட்லாஸ் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இந்த படத்தை பிரபுதேவா இயக்கினார். ஆனால், நம்ம ஊரு ஸ்டைலுக்கு படம் எடுக்க வேண்டும் என நினைத்த அவர், நம்ம ஊரு படங்களையே கடைசியாக எடுத்து வைத்துள்ளார். ஜீ சினி பிளெக்ஸ் சர்வரை கிராஷ் செய்யும் அளவுக்கு முண்டியடித்துக் கொண்டு படத்தை பார்த்த சல்மான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

    தர்பார் கதை

    தர்பார் கதை

    மும்பையில் நடக்கும் போதை பொருள் மாஃபியாவை பிடிக்க ஆதித்யா அருணாச்சலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் என்னலாம் பண்ணாரோ அதே வேலையை சல்மான் கான் ராதே படத்தில் செய்வதை பார்த்த ரசிகர்கள், தர்பாரே ஓடலை.. அந்த கதையை எடுத்து வச்சிருக்கீங்களே பிரபுதேவா என கலாய்த்து வருகின்றனர். வில்லன் ரந்தீப் ஹூடாவும் அப்படியே சுனில் ஷெட்டி மாதிரியே இருப்பது என்ன டிசைனோ!

    போக்கிரி

    போக்கிரி

    ராதே யுவர் மோஸ்ட் வான்டட் பாய் எனும் டைட்டிலிலேயே போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கான வான்டட் படத்தை நியாபகப்படுத்திய பிரபுதேவா, பல இடங்களில் போக்கிரி படத்தை பார்க்கும் உணர்வையே ஏற்படுத்தி இருப்பது வான்டட் பார்ட் 2 பார்க்கும் உணர்வையே இந்தி ரசிகர்களுக்கு உண்டாக்கியது.

    விஸ்வரூபம் இன்ட்ரோ

    விஸ்வரூபம் இன்ட்ரோ

    உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் வரும் ரீவைண்ட் சண்டைக் காட்சி போல சல்மான் கானின் இன்ட்ரோ சண்டைக் காட்சியை உருவாக்கி உள்ளனர். ஏற்கனவே கீழே இருக்கும் நபர்களை அடித்து உதைத்து விட்டு மேலே மாடி படி ஏறி வந்திருக்கலாமே எதற்காக கண்ணாடியெல்லாம் உடைத்துக் கொண்டு வர வேண்டும் என்பது தான் தெரியவில்லை. சண்டைக் காட்சியும் ஏதோ சீரியல் மேக்கிங் போலவே இருந்தது.

    கஜினி கதையும் இருக்கு

    கஜினி கதையும் இருக்கு

    ப்ளூ சட்டை மாறன் சொல்வது போல இந்த படத்திலும் திஷா பதானியை லூசு ஹீரோயினாகவே உருவாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி அவரது அப்பாவாக நடித்துள்ள பிகில் வில்லன் ஜாக்கி ஷெராஃப்பையும் ஜோக்கராக்கி இருப்பது ரசிக்கும் படியாகவே இல்லை. கஜினி படத்தில் அசினுக்கு சூர்யா சஞ்சய் ராமசாமின்னு தெரியாது. அதே போல தன்னை போலீஸ் அதிகாரியாக காட்டிக் கொள்ளாமல் மாடல் என்று சொல்லி அவருடன் முக்கால் வாசி படம் வரை சுற்றுவார் சல்மான் கான்.

    இரண்டு அல்லக்கையுடன்

    இரண்டு அல்லக்கையுடன்

    தர்பார் படத்திலாவது சுனில் ஷெட்டியை மல்டி நேஷன் டானாக காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ரந்தீப் ஹூடாவுக்கு இரண்டு அல்லக்கைகளை மட்டுமே கொடுத்து விட்டு, கையில் கத்தியைக் கொடுத்து கண்டபடி குத்தவும், கால்நடையாகவே எங்கேயும் செல்லவும் காட்சி அமைத்துள்ளனர். அதிலும் ஒரு அல்லக்கை டேவ் படிஸ்டா போல இருந்தும் முகத்தில் சுத்தமாக நடிப்பே வரவில்லை.

    மேகா ஆகாஷ்

    மேகா ஆகாஷ்

    சல்மான் கான் டீமில் போலீஸ் அதிகாரியாக எனை நோக்கிப் பாயும் தோட்டா, பேட்ட, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இருப்பார். ஏகப்பட்ட காட்சிகள் அவருக்கு சிறப்பாக கொடுக்கப்பட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கு அவர் முகத்தை பார்த்தால், இந்த குழந்தையை ஏன் டா கஷ்டப்படுத்துறீங்க என்பது போலவே தோன்றுவதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

    பாவம் பரத்

    பாவம் பரத்

    மேகா ஆகாஷ் ஆவது பரவாயில்லை. சல்மான் கானுக்கு பல இடங்களில் உதவி செய்கிறார். சண்டை காட்சிகளில் கழுத்தில் வில்லன் ரந்தீப் ஹூடாவிடம் கீறல் வாங்கி ரத்தம் சிந்துகிறார். ஆனால், பாலிவுட்டுக்கு சல்மான் பட வாய்ப்பு கிடைத்து விட்டதே என ஜாலியாக சென்ற நம்ம பரத்தை வெறும் அப்பியரன்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாகவே பிரபுதேவா பயன்படுத்தி இருப்பது சின்ன தளபதி ரசிகர்களை ரொம்பவே கஷ்டப்படுத்தி உள்ளது.

    ஹெலிகாப்டர் சண்டை

    ஹெலிகாப்டர் சண்டை

    பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கூட ஹெலிகாப்டர் சண்டையை பார்த்தால் இன்னமும் தத்ரூபமாக இருக்கும். ஆனால், சல்மான் கானின் பிரம்மாண்டமான ராதே படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ஹெலிகாப்டர் சண்டையில் மோசமான கிராபிக்ஸ் போட்டு அதில் மொக்கையான சண்டைக் காட்சியை வைத்து எந்தவொரு பதட்டமும் இல்லாமலே படத்தை முடித்து விட்டனர். நல்லவேளை முடிஞ்சிருச்சு!

    English summary
    Salman Khan’s Ramzan feast Radhe movie gets trolled over its screen play and poor making. Bollywood fans slams Prabhu Deva for its making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X