தமிழ் பற்றி பேசுவதில் அரசியல் இல்லை...விளக்கம் தந்த கமல்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக கமல் பங்கேற்கும் வார இறுதி எபிசோட் இன்று ஒளிபரப்பானது. இதில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் கூறிய தங்களின் கதை பற்றியும், அதில் இருந்து கற்க வேண்டிய பாடம் பற்றியும் கமல் விளக்கம் அளித்தார்.

இதில் ஐக்கி பெர்ரி பற்றி பேசிய கமல், தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒவ்வொரு பெண்ணும் தமிழ் பொண்ணு தான். இது உங்களுக்கும் பொருந்தும், சீன வானொலியில் தமிழில் பேசி வரும் கலையரசிக்கும் பொருந்தும் என்றார்.

spoking about tamil is not politics says kamal

தொடர்ந்து மதுமிதாவிடம் பேசிய கமல், உங்கள் வட்டார மொழியை கிண்டல் செய்வார்கள் என பேசாமல் இருக்காதீர்கள். நான் உட்பட்ட பலர் அந்த மொழியின் ரசிகர்கள் தான். எந்த படிப்பாக இருந்தாலும் நமது தாய்மொழியில் படிப்பதை விட வேறு எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடியாது. விஞ்ஞானத்தை தமிழில் படிக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்களுக்கு தெரியாத விஞ்ஞானமா நமக்கு தெரிந்து விட போகிறது.

என்ன இவர் தமிழ், தமிழ் என்று பேசுகிறார் என நினைக்காதீர்கள். தமிழ் மொழி பற்றி பேசுவதில் எந்த அரசியலும் இல்லை. மொழி பற்று மட்டும் தான். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் பற்றி அந்த மண்ணில் பிறந்த ஐக்கி பெர்ரியிடம் கேளுங்கள் என்றார்.

spoking about tamil is not politics says kamal

மற்ற மொழிகளில் படித்தால் புரியாது என்பது பிரிஷாரின் காலத்தில் அடிமையாக இருந்த காலத்தில் கற்றுக் கொண்டது. இமான் எந்த மேடையில் போனாலும் தனது வட்டார வழக்கில் தான் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. புலம் பெயர் தமிழர்கள் செய்து கொண்டிருப்பதை இங்கிருக்கும் பெற்றோர்கள் தமிழுக்காக செய்தால் தமிழ் வாழ்க என தனியாக கோஷம் போட தேவையில்லை. அது தானாக வாழும்.

தமிழின் பெருமையை பற்றி முழுவதுமாக புரிந்து கொண்டால் அதை கற்பதற்கு நமக்கு ஆயுள் குறைவாக இருக்கிறதே என நினைக்க தோன்றும். அவ்வளவு இருக்கிறது தமிழ் மொழியில் கற்றுக் கொள்வதற்கு என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X