twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பைடர் - வியாபாரம் என்ன?

    By Shankar
    |

    சென்னை: தெலுங்குப் பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபு, ஜீனியர் என்டிஆர் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.

    மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.

    Spyder movie business

    மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக பெரிய தோல்வியைத் தழுவியபடம். இந்த சூழலில் ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

    மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள 'ஸ்பைடர்' மகேஷ்பாபு பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்படுகிறது.

    மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதே வேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.

    மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் லட்சக்கணக்கில் மட்டுமே..

    முதல் முறையாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கம் என்பதால் நேரடி தமிழ் படமாக 'ஸ்பைடர்' எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் பிரசாத். தெலுங்கில் ஸ்பைடர் 84 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

    எஃப்எம்எஸ் உரிமை சுமார் 20 கோடிக்குள்ளாக வியாபாரமாகியிருக்கலாம் என தெரிகிறது. தமிழ்நாடு, கர்னாடகாவில் ஸ்பைடர் படத்தை வெளியிடும் விநியோக உரிமையை 21 கோடிக்கு லைக்கா வாங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஏரியாவில் எம்.ஜி அடிப்படையிலும் சில பகுதிகள் விநியோக முறையிலும் லைக்கா நிறுவனம் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் வியாபாரத்தை முடித்துள்ளது.

    லைக்கா நிறுவனம் தயாரிப்பு துறையில் 'கத்தி'க்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஸ்பைடர் லைக்காவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லுமா... பார்க்கலாம்.

    ஏரியா அடிப்படையில் விலை நிலவரம்:

    சென்னை - 1.50 கோடி,
    செங்கல்பட்டு - 4 கோடி,
    கோவை-3.50 கோடி, மதுரை - 2 .50 கோடி,
    சேலம் - 1.70 கோடி,
    நெல்லை - 1.10 கோடி,
    வட, தென்னாற்காடு - 2 கோடி

    -ஏகலைவன்

    English summary
    Will Mahesh Babu's Spyder turn as hit in Tamil? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X