Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஜோதிகா பேசியதை உங்கள் வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தி விட்டீர்கள்.. தயாரிப்பாளர் பாய்ச்சல் .!
சென்னை : நடிகை ஜோதிகாவின் பழைய பேச்சு தற்போது பலரின் வெறுப்பு அரசியலுக்காக தவறான முறையில் பரப்பபட்டு வருகிறது என்று ட்விட்டரில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு குற்றம் சாட்டியுள்ளார் .
Recommended Video
ராட்ச்சசி படத்திற்காக ஒரு தனியார் நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு விருது வழங்கபட்டது. அந்த மேடையில் விருதை வாங்கி விட்டு பேசிய நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தை நீங்கள் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இத்தனை நாட்கள் கழித்து தற்போது சமூகவலைத்தளங்களில் ஜோதிகா பேசிய இந்த காணொளி திடீரென வைரலாகி வருகிறது. இதில் ஜோதிகா பேசியதை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் முழுக்க சண்டையிட்டு வருகின்றனர். இதில், பலர் ஜோதிகாவை கண்டபடி விமர்சித்தும் வருகின்றனர்.
கோவில்
குறித்து
சர்ச்சை
பேச்சு..
ஜோதிகாவுக்கு
எதிராக
கொந்தளித்த
வீரலட்சுமி..
இன்றைய
டாப்
5
பீட்ஸில்!
இதை பார்த்து கோவமடைந்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ட்விட்டரில் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். இதில் ராட்ச்சசி, படத்தில் அண்ணி ஜோதிகா பேசிய வசனத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது, ஜோதிகா பேசியதை அரைகுறையாக அர்த்தம் புரிந்து கொண்டு, அநாகரீகமாக சிலரால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடு அறிய செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை வேறென்ன சொல்ல என்று கூறியுள்ளார்.

இதில் எஸ்.ஆர்.பிரபு நல்ல கருத்துகளை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை என்று மறைமுகமாக நல்ல கருத்தை தான் நீங்கள் பகிர்ந்து வருகிறீர்கள் என்று கிண்டலடித்து இருக்கிறார். ஜோதிகாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர் .

ஜோதிகா கோயில்களுக்கு செலவு செய்ய வேண்டாம் என சொல்லவில்லை நீங்கள் கோயில்களுக்கு செலவிடும் அதே அளவிலான தொகையை தான் பள்ளி, மருத்துவத்திற்கும் செலவிடுங்கள் என்று கூறியுள்ளார். ஜோதிகா பேசிய காணொளியை பார்த்து தவறாக புரிந்து கொண்டு இவர்கள் காட்டும் வெறுப்பு அரசியல் மிகவும் மோசமானது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.