»   »  பிரமாண்டமாக நடந்த ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பு..சிரஞ்சீவிக்காகத் திரண்ட தென்னிந்திய நட்சத்திரங்கள்

பிரமாண்டமாக நடந்த ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பு..சிரஞ்சீவிக்காகத் திரண்ட தென்னிந்திய நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நேற்று நடைபெற்ற ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பில் ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்களும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவின் 2வது திருமணம் கடந்த 28ம் தேதி பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது.

நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் ஸ்ரீஜாவின் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், சரத்குமார், அரவிந்த்சாமி என்று தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஸ்ரீஜா- கல்யாண்

ஸ்ரீஜா- கல்யாண்

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா- கல்யாண் திருமணம் கடந்த 28ம் தேதி பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் முக்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஸ்ரீஜாவின் முதல் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.இதனால் தனது நண்பரின் மகனும், வெளிநாடு வாழ் தொழிலதிபருமான கல்யாணை சிரஞ்சீவி தனது 2வது மாப்பிள்ளையாக தேர்வு செய்திருக்கிறார்.

வரவேற்பு

வரவேற்பு

இந்நிலையில் நேற்று ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பு ஹைதாராபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்தத் திருமண வரவேற்பில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நாகார்ஜுனா

நாகார்ஜுனா

இதில் நாகார்ஜுனா,அமலா, வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள், பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு ஸ்ரீஜா-கல்யாணுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

இந்த வரவேற்பில் அரவிந்த்சாமி, சரத்குமார், ராதிகா போன்ற தமிழின் முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.இதனால் திருமண வரவேற்பு நடந்த இடம் ஒரு மிகப்பெரிய விருதுகள் விழா போன்றே காட்சியளித்தது.

English summary
Sreeja and Kalyan’s wedding reception was held at Hyderabad Yesterday Evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil