»   »  பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி

பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீ ரெட்டியுடன் இருந்தது ராணா டகுபதியின் தம்பி தான்!- வீடியோ

ஹைதராபாத்: பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்து வருகிறார்.

அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அனைவரையும் அதிர வைத்தார்.

தற்கொலை

தற்கொலை

சினிமா பின்னணி இல்லாமல் வந்த உதய் கிரண் போன்றோர் தற்கொலை செய்கின்றனர். ஏனென்றால் தெலுங்கு திரையுலகை நான்கு பெரிய குடும்பங்கள் ஆட்டி வைக்கிறது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

வாரிசுகள்

வாரிசுகள்

அந்த நான்கு குடும்பத்தார் தங்களின் குழந்தைகளை சினிமாவில் வளர்த்துவிட அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். வேறு யாராவது வளர்ந்தால் அவர்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பி நாசமாக்கிவிடுகிறார்கள் என்று ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மீடியா

மீடியா

தெலுங்கு திரையுலகில் நடப்பது குறித்து மீடியாவிடம் எதுவும் கூறாமல் இருக்க எனக்கு கோடிக் கணக்கில் பணம் தர முன் வந்தது மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன். திரையுலகில் அவர்கள் மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

நான் எனக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகைகளுக்ககாவும் போராடுகிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன். அவர்கள் என் கெரியரை ஏற்கனவே நாசமாக்கிவிட்டார்கள். அதற்காக எல்லாம் போராடுவதை நிறுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்த நாள் வரை கேசிஆர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பெண் பிலிம் சேம்பர் முன்பு நிர்வாணமாக நிற்கிறாள். மக்கள் அவளை ஆர்வத்துடன் வந்து பார்க்கிறார்கள். முதல்வர் இது குறித்து சமூகத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

English summary
Actress Sri Reddy said that Telugu film industry is under the control of four families. That four families promote their kids and spoil the career of other people, she added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X