Just In
- 9 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 9 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 9 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 9 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 24.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை”.. பாலியல் புகார் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி
சென்னை: நடிகர் உதயநிதியை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது எனக் கூறி, தான் முன்பு கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் திடீர் அந்தர்பல்டி அடித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பலர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அருவருக்கத்தக்க பதிவுகள்
இதுவரை தான் கூறிய புகார்கள் தொடர்பாக அவர் ஆதாரங்கள் எதுவும் வெளியிட்டதில்லை. ஆனாலும் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அருவருக்கத்தக்க பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமயங்களில் அவரது பதிவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.

அமைதி
கிளைமாக்ஸ் என்ற தெலுங்குப் படமொன்றைத் தவிர ஸ்ரீரெட்டி கையில் வேறு படங்கள் ஏதும் இல்லை. அப்படத்திலும் சர்ச்சை நடிகையாகவே அவர் நடிக்க இருக்கிறார். சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்ட ஸ்ரீரெட்டி சமீபகாலமாக யார் மீதும் எந்தப் பாலியல் புகாரும் கூறாமல் இருந்தார்.

உதயநிதி பற்றி சர்ச்சைப் பதிவு
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஹாய் தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின்..மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற "கதிர்வேலன் காதல்" படத்தின் படப்பிடிப்பின் போது நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலம் சந்தித்தோம்.

ஏமாற்றி விட்டீர்கள்
அதையடுத்து நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பிறகும் நாம் நிறைய செய்திருக்கிறோம். ஆனால், தற்போது வரை எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை.

பரபரப்பு
நிச்சயம் நீங்கள் என்னுடன் இருந்ததை மட்டும் மறந்திருக்க மாட்டீர்கள்" எனக் கூறி இருந்தார். அதோடு கடைசியாக, ‘நீங்கள் மிகவும் சிறந்தவர்' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உதயநிதி தற்போது திமுக இளைஞரணித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். எனவே ஸ்ரீரெட்டியின் இந்தப் பதிவு திரையுலகில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீரெட்டி அந்தர்பல்டி
இந்தப் பதிவின் தொடர்ச்சியாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விவரமாக பேசப் போவதாக ஸ்ரீரெட்டி அறிவித்தார். எனவே, உதயநிதி பற்றி அவர் ஏதோ ஆதாரம் வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீரெட்டி திடீரென அந்தர்பல்டி அடித்து விட்டார்.

களங்கம் ஏற்படுத்த முயற்சி
அப்போது அவர், "உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு, எனது கணக்கு இல்லை போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என ஸ்ரீரெட்டி அப்போது தெரிவித்தார்.