»   »  கதகளி, அரண்மனை 2 வைத் தொடர்ந்து பிரஷாந்தின் சாஹசத்தை வளைத்தது தேனாண்டாள் பிலிம்ஸ்!

கதகளி, அரண்மனை 2 வைத் தொடர்ந்து பிரஷாந்தின் சாஹசத்தை வளைத்தது தேனாண்டாள் பிலிம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரஷாந்த் நடித்த சாஹசம் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

பிரஷாந்த் நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவிருக்கும் படம் சாஹசம். இப்படத்தில் பிரஷாந்த்துடன் இணைந்து அமண்டா, நாசர், துளசி, தம்பி ராமையா, தேவதர்ஷிணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


அருண் ராஜ் வர்மா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை வருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.


Sri Thenandal Films Capturing Saahasam Theatrical Rights

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஏற்கனவே கதகளி, அரண்மனை 2 ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இதில் கதகளி வருகின்ற பொங்கல் தினத்திலும், அரண்மனை 2 ஜனவரி 29 ம் தேதியும் வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து இந்த வருடத்தின் 3 வது படமாக சாஹசம் படத்தையும் இந்நிறுவனம் வெளியிடுகிறது.


பிப்ரவரி 5 ம் தேதி பிரஷாந்தின் சாஹசம் திரைப்படத்துடன், வெற்றிமாறனின் விசாரணை மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Thenandal Films Capturing Prashanth's Saahasam Tamilnadu Theatrical Rights. This movie will be Released on February 5th for Worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil