Don't Miss!
- News
மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகுது ஒரு ‘க்ரூப்’.. சீண்டிய ஈபிஎஸ் டீம்! கேள்விக்கு எஸ்கேப் ஆன ஜெயக்குமார்!
- Technology
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் இந்தியாவுக்கு வரும் Oppo Find N2 Flip!
- Finance
அதானியின் மாஸ்டர் பிளான பார்த்தீங்களா.. ஜனவரி 27 - 31ல் FPO.. எதற்காக தெரியுமா?
- Lifestyle
இந்த 5 அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?
- Automobiles
யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! தலையில் நல்லா மொளகா அரைச்சிடுவாங்க...
- Travel
சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
மறக்க முடியுமா மயில...பர்த் டே ஸ்பெஷல்: ஸ்ரீதேவி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்
சென்னை : ஸ்ரீதேவி என்று பெயர் சொன்னாலே தெரியாத ஆளே இந்தியாவில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய திரையுலகிலும், ரசிகர்கள் மனதிலும் அழுத்தமான, தனக்கென ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தியாவின் பல மொழிகளிலும் நடித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகை அந்தஸ்தை வகித்து வந்தவர் ஸ்ரீதேவி.
1963 ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ம் தேதி பிறந்த ஸ்ரீதேவி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி தனது 54வது வயதில் உயிரிழந்தார். இன்று அவரின் 59வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஸ்ரீதேவி பற்றி பலரும் அறியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
விக்ரம்
படத்தை
ரஜினி
2
முறை
பார்த்தார்..
விஜய்
பாராட்டு
வேற
மாதிரி
இருந்துச்சு..
லோகேஷ்
சொன்ன
தகவல்!

முதல் லேடி சூப்பர்ஸ்டார்
இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்றதும் நினைவில் வருபவர் நயன்தாரா தான். ஆனால் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. தன்னுடன் நடிப்பது எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், தனது அழகால் மட்டுமல்ல தனது நடிப்பாலும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் ஸ்ரீதேவி.

கடைசி படமும் சாதனை படம்
ஸ்ரீதேவி தனது 4வது வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 50 ஆண்டு கால திரைப்பயணத்தில் அவர் 300 படங்களில் நடித்துள்ளார். அவரது 300வது படம் மாம். அது தான் அவரது கடைசி படமும் கூட. ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீதேவியின் ஜோடிகள்
ஸ்ரீதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்கள் அனில் கபூர், ஜிதேந்திரா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் தான். இவர்களுடன் தான் ஸ்ரீதேவியும் அதிக படங்களில் நடித்துள்ளார். கமலுடன் 27 படங்களிலும்,ரஜினிகாந்த் உடன் 22 படங்களிலும் ஜிதேந்திராவுடன் 16 படங்களிலும், அனில் கபூருடன் 13 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

ரஜினிக்கு சித்தியாக நடித்த ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி, ரஜினியுடன் இணைந்து 22 படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் நடித்த முதல் படம் மூன்று முடிச்சு. இந்த படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு வயது 13. அப்போது ரஜினிக்கு வயது 25. தனது 13வது வயதிலேயே இந்த படத்தில் ரஜினிக்கு சித்தி ரோலில் நடித்தார் ஸ்ரீதேவி.

இந்தி பேச தெரியாத ஸ்ரீதேவி
பல ஆண்டுகள் இந்தி பேச தெரியாமல் தான் இந்தி படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. ராஸ், ரேகா போன்றவர்கள் தான் ஸ்ரீதேவிக்காக டப்பிங் பேசி உள்ளனர். முதல் முறையாக சாந்தினி படத்தில் தான் ஸ்ரீதேவி தனக்காக தானே இந்தியில் டப்பிங் பேசினார்.

ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்கள்
50 ஆண்டு திரைப்பயணத்தில் மிக சில ரோல்களில் மட்டுமே நடிப்பதற்கு நோ சொல்லி உள்ளார் ஸ்ரீதேவி. அப்படி அவர் நடிக்காமல் விட்ட படங்கள் பிறகு ஹிட் ஆகின. அப்படி ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்கள் Beta, Baazigar, Jurassic Park போன்றவை. இந்திய சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க விரும்பாத காரணத்தால் தான் ஸ்ரீதேவி இந்த படங்களில் நடிக்க மறுத்துள்ளார்.

ஸ்ரீதேவிக்கு இப்படி ஒரு திறமையா
ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த ஓவியர் கூட தான். சோனம் கபூரை அவர் நடித்த சவேரியா கேரக்டர் ஓவியத்தை வரைந்துள்ளார் ஸ்ரீதேவி. இந்த ஓவியம் துபாயில் நடந்த மோஹித் மார்வாவின் திருமணத்திற்கு பிறகு ஏலம் விடப்பட்டுள்ளது. இது தான் ஸ்ரீதேவி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி. இந்த திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் தான் ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளார்.