»   »  பர்த்டே பார்ட்டியில் பாலிவுட் கண்ணெல்லாம் மயிலு, மகள்கள் மீது தான்

பர்த்டே பார்ட்டியில் பாலிவுட் கண்ணெல்லாம் மயிலு, மகள்கள் மீது தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஸ்ரீதேவியும், அவரது மகள்களும் தான்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரும், பாலிவுட் பிரபலங்கள் பலரின் நண்பருமான மனிஷ் மல்ஹோத்ரா தனது பிறந்தநாளையொட்டி மும்பையில் பெரிய பார்ட்டி கொடுத்தார்.

Sridevi, daughters attract everyone in Manish Malhotra's B'day party

பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரிஷ்மா கபூர், ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால் பார்ட்டிக்கு வந்த அனைவரின் கண்களும் ஸ்ரீதேவி மற்றும் அவரின் மகள்கள் ஜான்வி, குஷி மீது தான்.

தாயும், மகள்களும் அழகான உடைகளில் மிகவும் அழகாக இருந்தனர். முன்பெல்லாம் புஸு புஸுவென்று இருந்த குஷி தற்போது ஒல்லிக்குச்சியாக உள்ளார். நியூயார்க்கில் படித்து வரும் ஜான்வி விரைவில் நடிகையாக உள்ளார்.

அவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கப் போவது வேறு யாரும் அல்ல பிரபல இயக்குனர் கரண் ஜோஹார் தான்.

English summary
Sridevi and her daughters Jhanvi, Khushi was the centre of attraction in designer Manish Malhotra's birthday party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil