»   »  மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்

மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி- வீடியோ

துபாய்: துபாய்: நடிகை ஸ்ரீதேவி துபாய் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்துவிட்டதாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் சனிக்கிழமை இரவு இறந்ததாக செய்திகள் வெளியாகின.

ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.

குளியல் தொட்டி

குளியல் தொட்டி

தடயவியல் அறிக்கை துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் எதிர்பாராவிதமாக மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி மது அருந்தியதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாத்டப்

பாத்டப்

ஸ்ரீதேவி பாத்ரூமுக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் வெளியே வராததால் கணவர் போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் குளியல் தொட்டியில் மூச்சு பேச்சு இன்றி கிடந்தார்.

இந்தியா

இந்தியா

ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு தனிவிமானம் மூலம் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

English summary
According to Post Mortem report, Legendary actress Sridevi dies of accidental drowning in the bathtub. It is noted that Sridevi was found unconscious in the bath tub.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil