»   »  ஶ்ரீதேவி பொம்மை புகைப்படம் வைரல்.. சிங்கப்பூர் ரெஸ்டாரண்டில் மரியாதை!

ஶ்ரீதேவி பொம்மை புகைப்படம் வைரல்.. சிங்கப்பூர் ரெஸ்டாரண்டில் மரியாதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூரில் ஸ்ரீதேவி பொம்மை தான் தற்போது வைரல்- வீடியோ

சென்னை : துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்ற ஸ்ரீதேவி அங்கு இறந்துவிட்டார்.

சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு 16-ம் நாள் சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்தாண்டு வைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட பொம்மையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஶ்ரீதேவி

ஶ்ரீதேவி

துபாயில் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்றார் ஸ்ரீதேவி. அங்குள்ள ஹோட்டல் அறையில் உள்ள குளியலறை பாத்டப்பில் மூழ்கி இறந்துவிட்டார்.

இரங்கல்

இரங்கல்

கடந்த ஞாயிறன்று சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு 16-ம் நாள் சடங்கு நடத்தப்பட்டது. இந்தச் சடங்கில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா, ராதிகா, அருண் விஜய், அஜித், ஷாலினி உள்பட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நினைவு கூரல்

நினைவு கூரல்

இந்தியா சினிமாவைத் தொடர்ந்து வெளிநாட்டு ரசிகர்களும் ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும், அவரது திரையுலக சாதனையை பாராட்டியும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஶ்ரீதேவி பொம்மை

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், கடந்த ஆண்டு ஸ்ரீதேவியின் உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டுப்புடவை, நகைகள் அணிவித்து வைத்துள்ளனர். ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட சிலையின் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
Sridevi was died in Dubai Recently. A doll statue of Sridevi was makeup by silk and jewels in a restaurant in Singapore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil