twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்' - ஶ்ரீதேவி குடும்பத்தினர் வேண்டுகோள்

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    யாரும் போன் பண்ணாதீங்க ப்ளீஸ்...ஶ்ரீதேவி குடும்பத்தினர் வேண்டுகோள்!- வீடியோ

    மும்பை : இந்தியத் திரையுலகில் கனவுக் கன்னியாக, சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் காலமானார்.

    மருத்துவ பரிசோதனைகள் காரணமாக அவரது உடல் இந்தியா வருவதற்குக் காலதாமதம் ஆகிறது. இன்று பிற்பகல் இந்தியா வந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஶ்ரீதேவியின் குடும்பத்தினர், ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

    உடல் இந்தியா வர தாமதம்

    உடல் இந்தியா வர தாமதம்

    துபாயில் மரணமடைந்த ஶ்ரீதேவியின் உடல் நேற்று இரவிலேயே இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெறுவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களால் அது தாமதம் ஆனது.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    இன்று மதியத்திற்கு மேல் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக சில மணி நேரங்கள் வைக்கப்பட உள்ளது. அதன் பின் மாலை அவரது உடலை மும்பை, ஜுஹு, பவன் ஹன்ஸ் கிரிமடோரியத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குடும்பத்தினர் வேண்டுகோள்

    குடும்பத்தினர் வேண்டுகோள்

    இதனிடையே, ஸ்ரீதேவியின் மறைவு குறித்து அவரது கணவர் போனி கபூர் சார்பில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்கள். அதில், "போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் கபூர், அய்யப்பன், மர்வா குடும்பத்தினர் ஸ்ரீதேவி கபூரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    போன் செய்ய வேண்டாம்

    போன் செய்ய வேண்டாம்

    இந்த துக்க சமயத்தில் மொத்த மீடியாவின் ஆதரவிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. மறைந்த ஸ்ரீதேவி கபூரின் உடல் இந்தியாவிற்கு வர உள்ளது. அது பற்றிய விவரங்களை கிடைக்கப் பெறும் போது தெரிவிக்கிறோம். தயவு செய்து யாரும் இது தொடர்பாக குடும்பத்தினருக்கு போன் செய்து கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Actress Sridevi, who was a superstar in the Indian film industry, died by heart attack in Dubai on Saturday night. In this case, the family of Sridevi has made a request to fans, friends and the media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X