»   »  'புலி' பட தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்

'புலி' பட தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி குறித்து நடிகை ஸ்ரீதேவி புலி பட தயாரிப்பாளர்கள் மீது மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் புலி படம் மூலம் கோலிவுட்டுக்கு திரும்பி வந்தார். புலி படத்தில் ஹீரோயின்களான ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகாவை விட ஸ்ரீதேவிக்கு தான் சம்பளம் அதிகம் என்று கூறப்பட்டது.


Sridevi files complaint against Vijay’s 'Puli' producers

ஸ்ரீதேவிக்கு ரூ.5 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புலி பட தயாரிப்பாளர்கள் அவருக்கு பேசிய சம்பளத்தில் ரூ. 50 லட்சம் பாக்கி வைத்துள்ளார்களாம்.


இதையடுத்து சம்பள பாக்கியை வாங்கித் தருமாறு கூறி புலி பட தயாரிப்பாளர்களான ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி. செல்வகுமார் ஆகியோர் மீது ஸ்ரீதேவி மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


அவர்கள் அந்த புகார் மனுவை தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Sridevi who made a comeback to Kollywood after so mnay years with Vijay's Puli has filed a complaint against the movie's producers PT Selvakumar and Shibu Thameens.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil