»   »  ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா?

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவிக்கு யார் சொல்லி அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பது தெரிய வந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவருக்கு மகராஷ்டிரா அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மதுபோதையில் இறந்தவருக்கு அரசு மரியாதையா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடந்தது குறித்த முழு விபரத்தையும் கேட்டு அனில் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சடத்தின் கீழ் கேட்டிருந்தார்.

பதில்

பதில்

அனிலுக்கு மகாராஷ்டிரா அரசு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதல்வருக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு

உத்தரவு

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று பிப்ரவரி 25ம் தேதி முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய் வழி உத்தரவு வந்தது என்று ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகனம்

தகனம்

முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு குறித்து மும்பை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது என்று ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நாட்டிற்கு என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood diva Sridevi was accorded a state funeral on the directions from Maharashtra Chief Minister Devendra Fadnavis's office, as per the reply to a query under the Right to Information Act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X