»   »  இருந்தாலும் ராஜமவுலி 'அப்படி' பேசியிருக்கக் கூடாது: ஸ்ரீதேவி குமுறல்

இருந்தாலும் ராஜமவுலி 'அப்படி' பேசியிருக்கக் கூடாது: ஸ்ரீதேவி குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ராஜமவுலியின் பேட்டியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் சிவகாமியாக நடிக்க இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டார். அவர் மறுக்கவே அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.


இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


ஏன்?

ஏன்?

பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டாகிவிட்டது. அப்படி இருந்தும் அந்த படத்தில் நான் நடிக்க மறுத்தது பற்றி மக்கள் ஏன் இன்னும் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.


ரூ. 10 கோடி

ரூ. 10 கோடி

பாகுபலி பட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அந்த படத்தில் நடிக்க நான் ரூ. 10 கோடி, ஹோட்டலில் ஒரு ஃபுல் ஃப்ளோர் மற்றும் 10 விமான டிக்கெட்டுக்கள் கேட்டதாக வதந்தி உள்ளது.


சினிமா

சினிமா

நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்படி அடாவடி செய்தால் என்னால் இந்த துறையில் தாக்குப்பிடித்திருக்க முடியுமா? இது போன்ற செய்திகளை கேட்டு வேதனையாக உள்ளது.


அடாவடி

அடாவடி

ஓவராக நான் செய்திருந்தால் சினிமா துறையில் உள்ளவர்கள் இந்நேரம் என்னை பேக் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பார்கள். நான் அத்தனை நிபந்தனைகள் விதித்ததாக தயாரிப்பாளர் ராஜமவுலியிடம் தவறுதலாக கூறினாரா என்று தெரியவில்லை.


ராஜமவுலி

ராஜமவுலி

ராஜமவுலியின் பேட்டியை பார்த்துவிட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ராஜமவுலி அமைதியான, கவுரமான நபர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் ஈகா படத்தை பார்த்துவிட்டு அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்.


வருத்தம்

வருத்தம்

ராஜமவுலி சிறந்த படைப்பாளி. அவர் என் விஷயம் பற்றி பேசிய விதம் என்னை வருத்தம் அடைய வைத்துவிட்டது. என் கணவரும் ஒரு தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கும் தெரியும் என்றார் ஸ்ரீதேவி.


English summary
Sridevi has finally cleared the air about refusing to act in SS Rajamouli's magnum opus Baahubali. She said that she was shocked by Rajamouli's interview about this issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil