»   »  ஶ்ரீதேவிக்கு இப்படி ஒரு திறமையா? ஏலத்திற்கு வருகிறது அவர் வரைந்த ஓவியம்!

ஶ்ரீதேவிக்கு இப்படி ஒரு திறமையா? ஏலத்திற்கு வருகிறது அவர் வரைந்த ஓவியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியை பற்றின ஒரு சீக்ரெட்!- வீடியோ

மும்பை : நடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஶ்ரீதேவியின் உடல் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் துபாயில் நடக்கவிருக்கும் ஏலத்தில் வைக்கப்பட இருக்கிறது.

ஶ்ரீதேவி

ஶ்ரீதேவி

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி உள்ளிட்ட சினிமா துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதைக் கவர்ந்து பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.

மறைவு

மறைவு

ஶ்ரீதேவியின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிதி திரட்டுவதற்காக

நிதி திரட்டுவதற்காக

தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவி தான் வரைந்த ஒரு ஓவியத்தை கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது.

ஓவியர் ஶ்ரீதேவி

ஓவியர் ஶ்ரீதேவி

ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரைவார். ஶ்ரீதேவி வரைந்து ஏலத்திற்கு வரும் ஓவியம் நடிகை சோனம் கபூரின் முதல் படமான 'சாவரியா' படத்தைப் பார்த்து ஸ்ரீதேவி வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வரைந்த பல ஓவியங்களைச் சேமித்து வைத்துள்ளார்.

ஓவியங்கள்

ஓவியங்கள்

நடிப்புக்கு அடுத்தபடியாக, அவர் விருப்பமாகச் செய்யும் வேலை ஓவியம் வரைவது. முந்நூறு படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் ஶ்ரீதேவி பல ஓவியங்களையும் வரைந்து சேகரித்து வைத்திருக்கிறாராம்.

போனி கபூர்

போனி கபூர்

ஶ்ரீதேவி தினமும் மாலை வேளைகளில் 4 முதல் 5 மணிநேரம் பெயின்டிங் செய்வாராம். வீட்டில் தனது மகள்களைப் பார்த்துக்கொண்டே இதிலும் ஈடுபடுவாராம். கணவர், பிள்ளைகளுக்கு அடுத்து ஶ்ரீதேவிக்கு பிடித்தமானது ஓவியம் வரைவது தான் என அவரது கணவர் போனி கபூரே கூறியிருக்கிறார்.

English summary
Actress Sridevi died last Saturday at Dubai. She is very much interested in painting. Sridevi's painting is to be placed in auction in Dubai. Sridevi has given her a painting to raise funds for a charity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil