»   »  வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi

வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பையில் இன்று நடிகை ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு- வீடியோ

மும்பை: ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறாக ஒரு முறை நடந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மாம் என்ற படத்தில் நடித்தார்.

மாம் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் போன்று ஓடவில்லை.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் அமைதியாக இருப்பார். யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் மாம் படத்தில் நடிக்கும் போது மட்டும் ஸ்ரீதேவி அப்படி இல்லை.

தாய்

தாய்

மாம் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த சஜல் அலி. சஜல் அலி அம்மா செல்லம். படப்பிடிப்பு நடந்தபோது சஜல் அலியின் தாய் இறந்துவிட்டார்.

அழுகை

அழுகை

பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீதேவிக்கு போன் செய்த சஜல் அலி என் அம்மா இறந்துவிட்டார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். ஸ்ரீதேவி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

அம்மா

அம்மா

தாயை இழந்த சஜல் அலியை தன் மகள் போன்று பார்த்துக் கொண்டார் ஸ்ரீதேவி. படப்பிடிப்பில் யாருடனும் நெருங்கிப் பழகாத ஸ்ரீதேவி சஜல் அலியை தனது 2 மகள்களோடு சேர்த்து மூன்றாவது மகளாகவே பார்த்தது அனைவரையும் வியக்க வைத்தது.

மரணம்

மரணம்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த சஜல் அலி மீண்டும் என் அம்மா இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சஜல் ஸ்ரீதேவியை தனது சொந்த அம்மாவாகே பார்த்தார்.

English summary
Sridevi normally doesn't mix with her collegaues in the shootingspot. But during the shooting of Mom she considers her reel daughter Sajal Ali as a real daughter and showered her with love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil