»   »  "என் புகைப்படம்...என் உரிமை"- இழிவான "கமெண்டர்"களுக்கு ஸ்ரீதேவி மகள் "கவுண்டர்"!

"என் புகைப்படம்...என் உரிமை"- இழிவான "கமெண்டர்"களுக்கு ஸ்ரீதேவி மகள் "கவுண்டர்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இணையதளத்தில் பிரபலங்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் புகைப்படம் போடும் போது அதைப் பற்றி சிலர் இழிவான கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால், அவர்களைக் கண்டு தான் பயப்படுவதில்லை என்று நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் தெரிவித்துள்ளார்.

இணையதள பிரச்சினைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கின்றோம். தற்போது இதே பிரச்சனையால் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சிக்கியுள்ளார்.

Sridevi’s daughter Khushi Kapoor slams haters in Instagram post

இதுபற்றி அவர் கூறுகையில், "என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் நான் அதைச் செய்வதில்லை.

எப்போது நான் எனது புகைப்படத்தினை பதிவு செய்தாலும் உடனே என் தோற்றம், உடை போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் அதிக உரிமை எடுத்துகொள்கின்றனர் சிலர்.

சமூகத்தில் கருத்துகளைக் கூற உரிமை உண்டு, ஆனால் ஒருவரைப் பற்றி இழிவாகவோ, அவரைத் தாக்கியோ கருத்து கூறும்போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து கூறுங்கள்.

இது வேடிக்கையான விஷயம் கிடையாது, இன்றைய காலத்திலும் பெண்கள் உடலமைப்பிற்காகக் கேலி செய்யப்படுவது வருத்தமான விஷயம். இதுபோன்ற விஷயங்களுக்கு நான் கவலைப்படபோவதில்லை" என்று கூறியுள்ளார்.

English summary
Sridevi’s younger daughter Khushi Kapoor, who is very active on Instagram, was recently criticised by a follower on the social networking platform for her looks. The star kid without any hesitation, went forth to give a life’s preaching to those who commented on her pictures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil